"இராவ் சாகிப்" வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்

on Thursday, December 23, 2010


தாய்த் தமிழையும், அதன் செழுமைகளையும் மெல்ல மறந்துவரும் சூழ்நிலையில், தமிழ் இலக்கியதிற்கு வளமை சேர்த்த பல நல்லறிஞர்களுள் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் குறிப்பிடத்தக்கவர். அவரைக் குறித்து இன்றைய சந்ததியினர் அறிந்து கொள்வதென்பது அவரை மட்டும் அறிந்துகொள்வது மட்டுமன்று; நம் தமிழ்த் தாய்மொழியின் சிறப்பை அறிந்து கொள்வதும் ஆகும்.


காஞ்சி அருகில் மெய்ப்பேடு என்னும் சிற்றூரில் வாழ்ந்த தொண்டை மண்டல வேளாளர் மரபைச் சார்ந்த அரியநாதர் என்பவர் விஜயநகரப் பேரரசில் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். பீஜப்பூர் சுல்தான் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தான். போர்க்களத்தில் சல்மத்கான் என்பவன் கிருஷ்ணதேவராயரை குறிவைத்து தாக்க அவரை நெருங்கியபோது, அரியநாதர் அந்த வீரனுடன் யுத்தம் செய்து அவனை அவனது படையோடு துரத்தி அடித்து, தம் மன்னர்தான் வெற்றிவாகை சூட பேருதவியாக விளங்கினார்.
அரியநாதரின் இத்தீரச் செயலை மன்னர் பாராட்டி, அவருக்கு "படைமுதலி" என்னும் பட்டத்தைத் தந்து, அவரைப் படைத் தளபதியாக்கி அமைச்சருக்கு உரிய தகுதியையும் வழங்கினார். அன்றைய நாள் முதலாக அரியநாதர் "தளவாய் அரியநாத முதலியார்" என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டதோடு, அவரது வழிவந்த மரபின் மக்களும் தம் இயற்பெயரோடு "முதலியார்" என்னும் அப் பட்டப்பெயரையும் இணைத்துக்கொள்ள, அந்த "விருதுப்பெயர்" காலப்போக்கில் இனப்பெயராக வழங்கப்பட்டு வருகிறது.



அத்தகு அரியநாத முதலியார் வழிவந்த சுப்பிரமணிய முதலியார் திருநெல்வேலிச் சீமையை ஆண்டுவந்த மேடைதளவாய் திருமலையப்ப முதலியாரின் சகோதரி மகள் உலகண்ணியை திருமணம் செய்துகொண்டார். திருமலையப்ப முதலியார் ஆர்க்காடு நவாபு மன்னர்களின் பிரதிநிதியாக விளங்கியவர். அவர் ஒரு முறை தென்காசிக்கு அருகிலிருக்கும் வெள்ளக்கால் என்னும் சிற்றூருக்கு வந்து அங்கு ஓர் அழகான மாளிகை கட்டி குடியேறினார்.


சோழவந்தான் சுப்பிரமணிய முதலியார் - உலகண்ணி தம்பதியரின் குடும்பம் செழித்து தழைத்தது. அவர்களது புதல்வர் பழனியப்ப முதலியாருக்கு 1857ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 14ம் நாள் பிறந்த தலைமகனுக்கு தாத்தாவின் பெயரான சுப்பிரமணியம் என்ற பெயர் இடப்பட்டு அவர் அவ்வாறே அழைக்கப்பட்டார். தனது தாத்தாவின் பெயரைப்பெற்று விளங்கிய பெயரன்தான் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்.
பிள்ளைப் பருவத்தை வெள்ளக்காலில் கழித்தபிறகு சிறந்ததொரு கல்வி கற்றுத்தேற தனது அத்தையின் கணவர் திருநெல்வேலி மேடை தளவாய் குமாரசாமி முதலியாரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். தெற்குப் புதுத்தெருவில் அமைந்திருந்த கணபதி வாத்தியாரின் திண்ணைப் பள்ளியில் தொடக்க கல்வி தொடங்கியது. பின்னர் வெ.ப.சு திருநெல்வேலி அரசடிப் பாலத்தில் இருந்த மிஷன் பள்ளியில் தமிழோடு ஆங்கிலமும் கசடறக் கற்றுத் தேர்ந்தார்.

அரண்மனையில் முத்துசாமிப்பிள்ளை என்னும் அந்தகர் (பார்வையற்றவர்) பணிபுரிந்து வந்தார். அவரிடமிருந்து
பாரதம்
இராமாயணம்
திருவிளையாடற்புராணம்
முதலிய இதிகாசங்களையும் மற்றும் பல புராணங்களையும் வெ.ப.சு வாய்வழியாக கற்றறிந்தார்.

மேலும் அந்த அரண்மனையிலேயே,
பாரத அம்மானை
வைகுண்ட அம்மானை
பவளக்கொடி மாலை
அல்லி அரசாணி மாலை
ஆகியவற்றை இளம்பருவத்திலேயே தினந்தோறும் கேட்டறிந்து வளர்ந்ததால் வெ.ப.சு இலக்கிய விருப்பத்திற்கு அவை பேருதவி புரிந்தன.

அவர் தம் பதினான்கு வயதிற்குள்ளாகவே,
திருக்குற்றாலத் தலபுராணம்
வரகுணாதித்தன் மடல்
விறலிவிடு தூது
கூளப்ப நாயக்கன் காதல்
ஆகிய சிற்றிலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார்.
வேம்பத்தூர் பிச்சு ஐயர்,
கல்போது புன்னைவனக் கவிராயர்,
அருணாசலக் கவிராயர்,
சுப்பிரமணியக் கவிராயர்
சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்
ஆகிய பெரும்புலவர்கள் கூடும் சங்கங்களிலும் வெ.ப.சு பங்கேற்று அவர்களிடமிருந்து இலக்கிய அறிவை வளப்படுத்திக்கொண்டார்.


இப்படியாக இருபது வயதிற்குள்ளாக சிற்றிலக்கியங்களை கற்றுத் தெளிந்தார். பிறகு அவர்,
நன்னூல்
இலக்கணக்கொத்து
இலக்கண விளக்கச் சூறாவளி
தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தி
பிரயோக விவேகம்
ஆகிய இலக்கண நூல்களைக் கசடறக் கற்றுத்தேர்ந்தார். பின்னர் திருநெல்வேலி சந்திப்பில் அமைந்த இந்துக் கலாசாலைப் பள்ளியில் மெட்ரிகுலேசன் வகுப்பில் சேர்ந்தார்.
டி.என்.சிவஞானம் பிள்ளை இவரின் உற்ற தோழராக இருந்தார். தம் தோழரின் வற்புறுத்தலினால் சென்னை கிறித்துவக் கல்லூரியில் மேற்படிப்புக்காக சென்றார். அங்கு படிக்கும் மாணவர்கள் தமிழ்ப்பாடத்தில் ஏற்படும் ஐயங்களைப் போக்க வெ.ப.சு விடம் வந்து தெளிந்து செல்வார்களாம். அத்தகைய சூழலில் அவர்களுக்காகவே கம்பராமாயணத்தை வெ.ப.சு ஊன்றிப்படித்தாராம்.



அக்கல்லூரியில்தான்,
டாக்டர் மில்லர், கூப்பர்,
அலெக்ஸாண்டர்,
பேட்டர்சன்,
மெக்டனால்டு
ஆகிய வெளிநாட்டு பேராசிரியர்கள் மற்றும்,
சுப்பராமையர்,
ரெங்கையச்செட்டி,
சின்னச்சாமி பிள்ளை,
ரெங்கசாமிராசா
ஆகிய ஆசிரியப் பெருந்தகையாளர்களிடம் மிகச்சிறந்த கல்வியையும் மேலான ஒழுக்கத்தையும் கற்றுக்கொண்டு அத்தகைய வாழ்நெறிகளைத் தவறாமல் கடைபிடித்து வந்திருக்கிறார். ஆங்கிலம், தமிழ் இருமொழிப் புலமையையும் கிறித்துவக் கல்லூரியிலேயே கற்றுத் தெளிந்திருக்கிறார் வெ.ப.சு
சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கப்பட்ட அரசு வேளாண்மைக் கல்லூரியில் சேர்ந்து 1884ம் ஆண்டில் ஜி.எம்.ஏ.சி என்னும் வேளாண்மை பட்டம் பெற்றார். 1895ம் ஆண்டு கால்நடை மருத்துவத் துறையில் "முதுநிலை கால்நடை மருத்துவ உதவியாளராக" பதவி உயர்வு பெற்று, ஆறாண்டுகள் கழிந்த பின்னர் 1911ம் ஆண்டில் துணைக் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.


கால்நடை அறிவியல் துறை வாயிலாக வெ.ப.சு தமிழ்மொழிக்கு ஆற்றியிருக்கும் தொண்டுக்கு தாய் தமிழ்மேல் பற்றுகொண்ட யாவரும் வெ.ப.சு வுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டவர்கள். இந்திய கால்நடைக்காரர் புத்தகம் மற்றும் இந்தியாவில் கால்நடைகளுக்குக் காணுகின்ற அதிக பிராணாபாயமான வியாதிகளைப் பற்றிய நூல் என்னும் இரு நூல்களும் வெ.ப.சு சீரிய தமிழ் மொழியாக்கத்தில் அரசு உதவியுடன் வெளியிடப்பட்டது. மேல்நாட்டு கால்நடை மருத்துவம் பற்றி தமிழ்மொழியில் வெளிவந்த முதல் நூல்கள் இவை. மேலும் அறிவியல் நூல்களை இனிய தமிழில் ஆக்கிக்காட்டியவர்களில் வெ.ப.சுவும் ஒருவர்.


1916ம் ஆண்டு வெ.ப.சு திருநெல்வேலி தாலுகா போர்டு உறுப்பினராகி, 1919ல் பதவி உயர்வு பெற்று, அதன் துணைத் தலைவரானார். அதற்கு அடுத்த ஆண்டில் தலைவராகவும் உயர்ந்தார். அவரின் நிர்வாகத் திறமையைக் கண்ட அன்றைய அரசாங்கம், அவரை 1922ம் ஆண்டு தென்காசி பெஞ்ச் கோர்ட்டின் தலைவராக நியமித்தது. இவரது அரும்பணிகளைக் கண்டு வியந்து, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அவருக்கு 1926ம் ஆண்டு "இராவ் சாகிப்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.


சென்னை மாகாண தமிழ்ச்சங்கம் உருவாக்கிய "கலைச்சொற்கள்" அகராதி நூல் தயாரிப்புக் குழுவிலும் உறுப்பினராக இருந்து திறம்பட செயல்பட்டார். அதுபோல வேளாண்மைத் துறைக்கான கலைச் சொல்லாக்கம் இவரின் பெரு முயற்சியாலே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



உ.வே.சாமிநாதய்யர்
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
"பத்மாவதி சரித்திரம்" நாவலை எழுதிய மாதவையா
மு.ரா. அருணாசலக் கவிராயர்
இரசிகமணி டி.கே.சி
ஹிருதாலய மருதப்ப தேவர்
கவிராஜர் நெல்லையப்ப பிள்ளை
போன்றோருடன் வெ.ப.சு நட்பு கொண்டிருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக 25 ஆண்டுகள் அரும்பணியாற்றி தமிழ்த்துறையை மேன்மை அடையச்செய்தார்.


வெ.ப.சு வாழ்நாள் முழுவதும் சேர்த்த நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டு "வெ.ப.சுப்பிரமணிய முதலியார் நூல் நிலையம்" என்னும் பெயர்பெற்று திருநெல்வேலி ம.தி.தா இந்துக்கல்லூரி ஆட்சிமன்றக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்றும் செயல்பட்டு வருகிறது.



உலகத்தின் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட "சுவர்க்க நீக்கம்" (Paradise Lost) என்ற மில்டன் எழுதிய உன்னத காவியத்தை தமிழில் அழகுற செய்யுளில் படைத்தவர் வெ.ப.சு. இவர் படைத்திருக்கும்,
இலக்கிய நூல்கள்
அகலிகை வெண்பா
கம்பராமாயண சாரம் (7 காண்டங்கள்)
கல்வி விளக்கம்
கோம்பி விருத்தம்
சருவசன செபம்
தனிக்கவித் திரட்டு
நெல்லைச்சிலேடை வெண்பா
இராமாயண உள்ளுறை பொருளும்
தென்னிந்திய சாதி வரலாறும்
ஆகியவை.


கல்வியிலும், ஒழுக்கத்திலும் மேன்மைகொண்டு விளங்கிய ஆயிரம் பிறைகண்ட செந்தமிழ் தொண்டர் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் 12.10.1946ல் இவ்வுலகை விட்டு நீங்கினாலும் அவர் திருப்பெயர் தமிழ் உள்ளவரை நிலைத்திருக்கும்.

செந்தமிழ்க் களஞ்சியம் "இலக்கணத் தாத்தா" வித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை



"இலக்கணத் தாத்தா" என்று அறிஞர் பெருமக்களால் அன்போடு அழைக்கப்பட்ட பெருமைமிக்கவர் வித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை. தமிழ்த்தொண்டே தம் தொண்டு எனக் கொண்டுழைத்த அவர், புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை மரபைச் சார்ந்தவர். ஒரு பெரிய நிறுவனம் சாதிக்க வேண்டிய, சாதிக்க முடியாத அருந்தமிழ்ப் பணியை ஆற்றி மறைந்தவர்.

மே.வீ.வே. சென்னை, சைதாப்பேட்டை மேட்டுப்பாளையத்தில் 1896 ஆகஸ்ட் 31ம் தேதி பிறந்தார். தமது இளமைக் கல்வியை சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் தொடங்கினார். ஆனால் வறுமையின் காரணமாகக் கல்வியைத் தொடர முடியவில்லை. அப்போது சென்னை வேப்பேரியில் உள்ள எஸ்.பி.சி.கே. அச்சகத்தில் அச்சுக் கோப்பாளராகவும், அஞ்சலகத்திலும், வழக்குரைஞர்களிடத்தும் உதவியாளராகவும் பணிபுரிந்தார். என்றாலும், தமிழார்வம் காரணமாக கா.ர.கோவிந்தராச முதலியாரிடத்தில் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். கலாநிலையம் சேஷாசல ஐயர் நடத்தி வந்த இரவுப் பள்ளியில் ஆங்கிலமும் கற்றார். அதன்பின்பு வித்துவான் தேர்வில் வெற்றி கண்டு பட்டம் பெற்றார்.


1920ல் சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும், புரசைவாக்கம் பெப்ரீஷியல் உயர்நிலைப் பள்ளியிலும் தலைமைத் தமிழாசிரியராகப் பணிபுரிந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாகப் பணியை விட்டு விலக நேர்ந்தது. எனினும் பணியினை துறந்தாரே அன்றி தமிழைத் துறக்கவில்லை. 1928ல் தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கத்தின் துணைத் தலைவர் தேர்வு, வித்துவான் தேர்வு முதலியவற்றிற்குரிய தனி வகுப்புகளை நடத்தி வந்தார். தேர்வுகளில் தேர்ச்சி அடைவதற்காக மட்டும் பாடம் சொல்லித் தரும் இன்றைய ஆசிரியர்களைப் போல் அல்லாமல் தமது மாணவர்கள் அறிஞர் பலரும் வியக்கும்படி புலமைப் பெற்றுத் திகழ வேண்டும் என்று விரும்பியவர் மே.வீ.வே. அவர் தமது மாணவர்களை நோக்கி, "வித்துவான் பட்டம் பெற்றீர்கள். அதனைக் காற்றில் பறக்கவிடும் பட்டமாக்காதீர்கள். மேன்மேலும் பயின்று தக்க அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள்; பிறருக்கும் வழங்குங்கள். வழியில் கேட்ட ஐயத்திற்கு வீட்டில் விடை எண்ணாதீர்கள். தக்கவாறு பொருள் உணர்ந்து கேட்போர் ஐயமற வெளியிடுங்கள்," என்று கூறுவதிலிருந்து தமது மாணாக்கர் எப்படித் திகழ வேண்டும் என்று விரும்பினார் என்பதை அறியலாம்.

புரசை - லுத்ரன் மிஷன் பள்ளிப் பாதிரியார்களால் நடத்தப்பட்டு வந்த குருகுல மதக் கல்லூரியில் இந்துமதச் சித்தாந்தப் பேராசிரியராக இவர் பணியாற்றிய போது ஜெர்மானியர் பலருக்கும் தமிழ் போதிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இவரிடம் தமிழ் பயின்ற ஜெர்மானியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்,
டாக்டர். ஸ்டாலின், டாக்டர். கிராபே (இவர் பெரிய புராணத்தை ஜெர்மனியில் மொழிபெயர்த்த எல்வின் மகள்),
ஹில்டகார்டு மற்றும் பலர்.


இதேபோல, செக்.நாட்டு திராவிட மொழி ஆராய்ச்சியாளர் டாக்டர் கமில் சுவலபிலும் மே.வீ.வே.யின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சுவலபில், மே.வீ.வே. மீது அதிக மரியாதை கொண்டிருந்தார் என்பதை அவர் எழுதிய தமிழகச் சித்தர்களைப் பற்றிய "The Poets of the Powers" என்னும் நூலில் இவரின் புகைப்படத்தை வெளியிட்டு "எனது குரு" என்று குறிப்பிட்டதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


தமிழிலும், ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்ற மே.வீ.வே. பாடம் போதிக்கும் மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் எழுதுவதிலும் இவருக்கு இணை இவரே. டாக்டர். உ.வே.சா. கூட தாம் பதிப்பிக்கும் நூல்களில் சில குழப்பங்களுக்கு மே.வீ.வே.வையே நாடினார் என்பதும் இங்கே பதிவு செய்யக் கூடிய விஷயமாகும்.
தமிழ் மொழியை தொல்பொருள் ஆராய்ச்சியாக ஆராய்ந்த சிற்பி மே.வீ.வே. அரசாங்க இலக்கிய - இலக்கண பாடநூல் குழுவிலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவிலும் தலைமைப் பதிப்பாசிரியராகத் தமது இறுதிக் காலம் வரை இவர் இருந்துள்ளார். அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கம்பராமாயணப் பதிப்புக் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.

மே.வீ.வே. தாமாக முயன்று பதிப்பித்த நூல்கள்;

இறையனார் அகப்பொருள்
தொல்.சொல் (நச்சர் உரை)
தஞ்சைவாணன் கோவை
வீரசோழியம்
யாப்பருங்கலம் காரிகை
அஷ்டபிரபந்தம்
யசோதரகாவியம்
நளவெண்பா
முதலியன.

இலக்கண உலகில் இவர் பதிப்பித்த யாப்பருங்கலக்காரிகை இன்றும் அறிஞர்களால் போற்றப்படுகிறது. இதற்கு இணையான ஒரு பதிப்பு இன்றுவரை இல்லை என்றே கூறலாம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இந்நூலை மீள்பதிப்பு செய்துள்ளது. இவர் பதிப்பாளராக மட்டுமன்றி படைப்பாளராகவும் இருந்துள்ளார்.


பத்திராயு(அ) ஆட்சிக்குரியோர்
திருக்கண்ணபிரானார்
அற்புதவிளக்கு
குணசாகரர் (அ) இன்சொல் இயல்பு
அரிச்சந்திர புராணச் சுருக்கம்
அராபிக்கதைகள்
முதலியன இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இது தவிர;
அம்பலவாணன்
இளங்கோவன்
என்னும் இரு புதினங்களையும் படைத்துள்ளார்.

இவரது பதிப்புப்பணி - படைப்புப்பணி குறித்துத் தமிழ்த்தென்றல் திரு.வி.க. பின்வருமாறு கூறுகிறார்;
"திரு.வேணுகோபாலப்பிள்ளை விளம்பரமின்றி ஆரவாரமின்றி, அமைதியில் நின்று தமிழ்த்தாய்க்குத் தொண்டு செய்வோருள் ஒருவர். திரு.பிள்ளை, நூல்களைப் பிழையின்றி பதிப்பிப்பதில் பெயர் பெற்றவர். இவரது தமிழில் தமிழூர்தல் வெள்ளிடைமலை. தமிழறிஞர் வேணுகோபாலரின் பிழையற்ற உரைநடை, தற்போது கறைபட்டுள்ள தமிழுலகைத் தூய்மைச் செய்யும் பெற்றி வாய்ந்தது." (நவசக்தி 8.4.1938).


திருத்தமான செயல்களுக்கு அடிப்படை மொழியே. மொழி செப்பமாக இல்லாவிட்டால் கருதிய எச்செயலும் கருதியபடி நடவாது என்பதை உணர்ந்த மே.வீ.வே. மொழியில் பிழை நேராதபடி எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளார். "தமிழ் நூல்கள் சிறியவையாயினும் பெரியவையாயினும் பிழையின்றி திருத்தமான முறையில் கண்கவர் வனப்புடன் வெளிவருதல் வேண்டும் என்பதே என் வாழ்வின் குறிக்கோள்" என்னும் அவரின் கூற்றே இதற்குப் போதிய சான்று.
1939-45ல் உலகையே உலுக்கிய இரண்டாம் உலகப்போர் சென்னையையும் விட்டு வைக்கவில்லை. அதனால் பாதிப்புக்குள்ளான பலர் பல்வேறு இடங்களில் சிதறினர். மே.வீ.வே. காஞ்சிபுத்துக்கு இடம் பெயர்ந்தார். அங்கும் அவரது தமிழ்ப்பணி ஓயவில்லை. "கச்சித் தமிழ்க் கழகம்" என்னும் ஓர் அமைப்பை நிறுவி பலருக்கும் தமிழ் உணர்வை ஊட்டினார். அத்துடன் சீவகசிந்தாமணி குறித்து நெடியதோர் சொற்பொழிவாற்றினார். இவரது பேச்சைக் கேட்ட பலரும் இவரை சமண மதத்தவர் என்றே எண்ணலாயினர். அதனால்தான் திரு.வி.க. "சிந்தாமணிச்செல்வர்" என்னும் பட்டமளித்து இவரைப் பாராட்டினார். சுவாமி விபுலானந்த அடிகளும் "உமது தமிழறிவு நாட்டிற்குப் பயன்படுவதாகுக," என்றும் பாராட்டி மகிழ்ந்தார்.

இது தவிர;

செந்தமிழ்க்களஞ்சியம் (அறிஞர் அண்ணா வழங்கியது)
கன்னித் தமிழ்க்களஞ்சியம்
கலைமாமணி
ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். நியூயார்க் உலகப் பல்கலைக்கழகம் மே.வீ.வே.க்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.


படிப்பது, எழுதுவது, பதிப்பிப்பது, பாடம் சொல்லித்தருவது என்ற வட்டத்துக்குள்ளேயே தமது வாழ்நாளைக் கழித்தவர். எந்த ஒரு நூலையும் நன்கு படித்து தேர்ந்த பின்னரே அதைப் பற்றிய கருத்தையோ விளக்கத்தையோ கூறும் இயல்புள்ள இவர், அரைகுறையாகப் படித்துவிட்டு கருத்துக் கூறுவது தவறு என்று பிறருக்கு அறிவுரை கூறுவார்.
தமிழ் இலக்கிய உலகில் 89 ஆண்டுகள் வரை உலவிய மே.வீ.வே. 4.2.1985 அன்று இரும்புண்ட நீரானார். நல்லவர்கள் உதிப்பதும் - மறைவதும் நன்நாளில் என்பதற்கேற்ப இவர் கோகுலாஷ்டமியில் பிறந்து தைப்பூசத்தில் மறைந்தார். இவரது பெருமையை பறைசாற்றும் வகையில் ஜெர்மனி கோல் பல்கலைக்கழகம் இவரது பெயரைச் சூட்டி கெளரவித்தது. தமிழக அரசு இவருக்கு நூற்றாண்டு விழா கொண்டாடி மகிழ்ந்தது.

இவை அனைத்தினூடே கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட பலரும் எழுதிய "பாவலர் போற்றும் மகாவித்துவான் மே.வீ.வே." என்னும் தொகுப்பு நூல் இவரது புகழை இன்றளவும் பேசிக்கொண்டிருக்கிறது.

தேசத்தின் சொத்து மாமனிதர் தோழர் ப.ஜீவானந்தம் பிள்ளை

on Sunday, December 12, 2010


வீரத்துறவி விவேகானந்தருக்குப் பிறகு இளைய சமுதாயத்தை வசீகரித்தவர் ஜீவா என்று அழைக்கப்படும் ப.ஜீவானந்தம்.

நாகர்கோயிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி, பட்டப்பிள்ளை - உமையம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

பெற்றோர் இட்டபெயர் சொரிமுத்து.

ஐயனார் என்ற கிராம தெய்வத்தின் பெயர்தான் சொரிமுத்து.

அவர்கள் குல தெய்வம் அது.

வெள்ளையரை எதிர்த்துப் போராடிய காலம்.திராவிடர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இளம் வயதினராய் இருந்த அவரது உள்ளத்தில் எரிமலையாய் புகையச்செய்தது.இளம் வயதில் அவரைக் கவர்ந்தது மகாத்மாவின் கொள்கைகள். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப, நேர்மை தவறாத ஒழுக்க குணம், தனக்குச் சரியெனப் படாததை எதிர்க்கும் போர்க்குணம், அஞ்சா நெஞ்சம், அறிவு, ஆற்றல் போன்றவற்றை இளம் வயதிலேயே வாய்க்கப் பெற்றார்.

அந்த நாளில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸோடு, ஜீவா நெருங்கிப் பழகினார்.சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார்.நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது படிக்கும்போதே முதல் கவிதையை எழுதினார்.அந்தக் கவிதை காந்திஜியையும், கதரையும் பற்றியது.

பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார்."ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றினார்.அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார்.காந்திய வெளியீடுகளைப் படித்தார்.காந்திஜியிடமிருந்து ஒத்துழையாமை இயக்க அழைப்பு வந்தது.

காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது.

அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது.அன்னியத் துணிகளைத் தீயிட்டுக் கொளுத்தி, வெறும் கோவணத்துடன் வீடு திரும்பினார்.அது முதல் அவர் கதர் அணியத் தொடங்கினார்.

பகத் சிங் தூக்கிலிடப்பட்ட காலம் அது. வாலிபர் உலகம் கொந்தளித்து எழுந்தது. வன்முறையில் நம்பிக்கையற்றவராயிருப்பினும் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை அவரால் ஏற்க முடியவில்லை. ஜீவா சீறி எழுந்தார். அனல் கக்கும் அவர் பேச்சு இளைஞர்களைக் கவர்ந்தது.

சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா.

ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஜீவா முழுக்க முழுக்க சோஷலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார்.

பொதுத் தொண்டில் சிறு வயதிலிருந்தே நாட்டம் கொண்ட ஜீவாவுக்கு, தீண்டாமை ஒழிப்பைப் பற்றியே எப்போதும் சிந்தனை. ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகன் போக்கிற்கு தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் தந்தை மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். அதற்கு ஜீவா ஒப்புதல் தரவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க ஜீவா இசையவில்லை. இறுதியில் அவர் குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.

ஜாதி வித்தியாசம் பாராமல் ஆசிரமம் நடத்தப்பட வேண்டும் என்ற உறுதியுடன் நிதி சேர்க்கப்பட்ட வ.வே.சு.ஐயரால் சேரன்மாதேவியில் நடத்தப்பட்ட தேசிய குருகுலத்தில் ஜாதி பாகுபாடு காட்டப்பட்டது என்ற புகார் எழுந்து வ.வே.சு.ஐயரைக் கண்டித்து கிளர்ச்சி நடத்தது. இதை அறிந்த ஜீவா மற்றும் பெரியார் போன்றோர் கடுமையாக எதிர்த்தனர்.

வ.வே.சு. ஐயர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி ஏற்றிருந்தார். தீண்டாமையை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த ஜீவா, ஐயரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்கவில்லை. அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார். அந்த ஆசிரமத்தையும் அதன் செயல்பாடுகளையும் வ.உ.சி. போன்றவர்கள் மிகவும் பாராட்டியுள்ளனர்.

ஆசிரமம் அமைக்கும் முன்பே ஜீவாவுக்குத் தனித்தமிழிடம் அதிகப் பற்று ஏற்பட்டது. தூய தமிழில் பெயரிட வேண்டும் என்ற ஆவலில் தனது பெயரை "உயிர் இன்பன்" என்று மாற்றிக்கொண்டார். ஜீவாவின் ஆசிரமத்துக்கு வந்த வ.ரா., ஆசிரமக் கொள்கையையும் நடைமுறையையும் பாராட்டினார். ஜீவாவின் சொற்பொழிவுகளைக் கேட்டு அவர் மீது பெரும் மதிப்பு கொண்ட வ.ரா., ஜீவாவுக்கு ஆலோசனை கூறினார்:-

"உங்களை நான் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நன்மையையும், வளர்ச்சியையும் கருதியாவது தனித்தமிழில் பேசுவதை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னதான் அபூர்வமாகப் பேசிய போதிலும் உங்களுடைய தனித்தமிழைப் பாமர மக்களால் புரிந்துகொள்ள முடியுமா?'' என்ற வ.ரா.வின் அறிவுரையை சிந்தித்த ஜீவாவுக்கு தனித்தமிழில் உள்ள வெறி நீங்கியது.

"உயிர் இன்பன்" என்று மாற்றிக்கொண்ட தனது பெயரை, மீண்டும் ஜீவானந்தமாக மாற்றினார்.

இறுதிவரை ப. ஜீவானந்தம் - ஜீவா என்றே அழைக்கப்பட்டார்.

ஜீவா நடத்திய காந்தி ஆசிரமத்துக்கு ஜீவா அழைப்பின்பேரில் மகாத்மா காந்தி விஜயம் செய்தார். ஜீவானந்தத்தின் இளமைத் தோற்றமும், வாதத் திறமையும் காந்தியை வியக்கவைத்தன. ஆசிரமப் பணிகளையும் சேவையையும் பாராட்டிய காந்தி, ஜீவாவைப் பார்த்து, "உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது?'' என்றார்.

"இந்த தேசம்தான் எனக்குச் சொத்து'' என்று ஜீவா பதிலளித்தார்.

ஜீவாவின் பதிலைக் கேட்டு காந்திஜி திகைத்தார்.

பிறகு "இல்லையில்லை, நீங்கள்தான் இந்த தேசத்தின் சொத்து'' என்றார்.கம்பனிலும், பாரதியிலும் அவர் கண்ட புரட்சிக்கொள்கை, அவரை இலக்கியங்களில் ஈடுபாடு கொள்ளச் செய்தது.

கடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.

அவ்வப்போது போராட்டங்களில் கலந்து கொண்டு ஜீவா பலமுறை சிறை சென்றுவிடுவார். கட்சி, கொள்கை, போராட்டம், சிறைவாசம் என்று வாழ்க்கையின் பெரும் பகுதியைக் கழித்த அவர், குடும்பம் ஒன்று உண்டு என்பதை மறந்துவிடவில்லை.

கொள்கையைப் பரப்ப "ஜனசக்தி" நாளிதழைத் தொடங்கிய ஜீவா, "தாமரை" என்ற இலக்கிய இதழை 1959இல் தொடங்கினார். அதில், "தமிழ் மணம் பரப்ப" என்று பாராட்டி கவிதைகள் எழுதினார், பொதுவுடைமைக் கொள்கைக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.1933இல் ஜீவா எழுதிய "பெண்ணுரிமை கீதாஞ்சலி" என்ற கவிதை நூல் வெளிவந்தது. இதுதான் ஜீவா எழுதிய முதல் நூல்.

அப்போதிலிருந்து இந்த நாடு விடுதலை அடையும்வரை பல்வேறு சூழ்நிலைகளில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஜீவா எழுதிய பாடல்கள், தொழிலாளர்களை எழுச்சி பெறச்செய்தன.

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றுவதில் ஜீவா முக்கிய பங்கேற்றார்.

1963ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி அந்த மாவீரன் மரணமடைந்தார்.

மரணமா? அவருக்கு மரணமேது?

நாட்டில் சமத்துவம் நிலவும் வரை, தீண்டாமை ஒழியும் வரை, ஒற்றுமையான குடியரசு அமையும் வரை அவர் ஜீவனுக்கு அழிவேது?

மகாத்மா காந்தி கூறியதுபோல் அவர் இந்தியாவின் சொத்து.

தமிழ்மணி:- திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை




"பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும் காலமெல்லாம் புலவர் வாயில் துதியறிவாய்,
அவர் நெஞ்சில் வாழ்த்தறிவாய், இறப்பின்றித் துலங்குவாயே."

என பாரதி, உ.வே.சாமிநாதய்யரைப் போற்றுகிறார்.

ஓலைச் சுவடிகளிலிருந்த பழந்தமிழ் நூல்களைத் தேடித்தொகுத்து அச்சிட்டுப் பெரும்புகழ் பெற்றார் உ.வே.சா எனில், அத்தகைய உ.வே.சா.வுக்கு அருந்தமிழ் போதித்து அவரைக் கற்றோரவையில் முந்தியிருக்கச் செய்த பெருமைக்குரியவர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆவார்.

ஆசிரியரால் மாணாக்கர் தமிழ்நூற்கடலை நிலைகண்டுணர்ந்தார். மாணாக்கர் தம் ஆசிரியர் மகாவித்துவானின் வரலாற்றை நூலாக்கி அவரின் அளக்கலாகாப் புலமையை உலகறியச் செய்தார்.

கற்றல்
கற்பித்தல்
கவிபுனைதல்
எனும் இவற்றை நற்றவமாய் மேற்கொண்ட நற்புலவர் மகாவித்துவான் எனக் கூறுதல் மிகையன்று.



பலர்க்கும் இன்ன காலமென்னாது எத்தகைய பெருநூலும் எளிதுணர்த்திப் பயனுறுத்தும் இணையிலா ஆசான் எனத் தம் ஆசானைப் பற்றிச் சாமிநாதய்யர் குறிப்பிடுவார். ஆசானின் மற்றொரு மாணாக்கர் சி.தியாகராச செட்டியார். பிள்ளை எழுதிக்கொடுத்த நூல்கள் பற்றிக் கூறுகையில், "எத்தனையோ கோவைகள் மற்றும் எத்தனையோ புராணங்கள், எண்ணிலடங்கா நூல்கள் அத்தனையும் இத்தனையென்று எத்தனை நாவிருந்தாலும் இயம்ப இயலாது," என்பார்.
சிதம்பரம்பிள்ளை - அன்னத்தாச்சி தம்பதியர் மதுரையில் சைவக் குடும்பத்தில் பிறந்தவர்கள். சிதம்பரம் பிள்ளை மதுரை மீனாட்சியம்மை திருக்கோயிலில் மீன் முத்திரையிடும் பணி செய்துவந்தார். திருக்கோயில் நிர்வாகத்தோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், திருச்சிக்கு மேற்கே காவிரியின் தென்பாலுள்ள எண்ணெய் மாகாணம் என்னும் ஊரில் வந்து தங்கினார். தமிழறிவு நிரம்பப் பெற்றிருந்த சிதம்பரம் பிள்ளை அவ்வூரிலிருந்தோர்க்கு தமிழ் நூல்களைக் கற்பித்தார். சிறிது காலத்துக்குப்பின் அங்கிருந்து அதவத்தூர் சென்று அங்கும் ஆசிரியப்பணியை மேற்கொண்டார். குடும்பம் அதவத்தூரில் இருந்தபோது ஸ்ரீபவ ஆண்டு பங்குனித் திங்கள் 26ம் நாள் (6.4.1815) அன்னதாச்சி ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தார்.


மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருளால் பிறந்தமையின் மீனாட்சிசுந்தரம் எனப் பெயர் சூட்டினர். குடும்பம் சோமரசம்பேட்டைக்குக் குடிபெயர்ந்தது.



மீனாட்சிசுந்தரம் தந்தையிடம் தமிழ் கற்றார்.
நெடுங்கணக்கு
ஆத்திச்சூடி
அந்தாதிகள்
கலம்பகங்கள்
பிள்ளைத்தமிழ் நூல்கள்
மாலைகள்
சதகங்கள்
நிகண்டு
கணிதம் மற்றும்
நன்னூல்
போன்ற இலக்கண நூல்களையும் கற்றுத் தேர்ந்தார்.



கவிபுனையும் ஆற்றலும் பெற்றார். இவரின் கவிபுனையும் ஆற்றலைச் சோதிக்க விரும்பிய முருங்கப்பேட்டை செல்வர் ஒருவர், "இப்பாட்டுக்கு அருத்தம் சொல்" என்று முடியுமாறு ஒரு வெண்பா இயற்றச் சொன்னாராம். உடனே மீனாட்சிசுந்தரம் நெல்லுக்கும் திரிமூர்த்திகளுக்கும் சிலேடை அமைத்து ஒரு வெண்பா பாடினார்.



"ஒண்கமலம் வாழ்ந்து அன்னமாகி உரலணைந்து
தண்கயநீர்த் தூங்கித்தகும் ஏறூர்ந்து - ஒண்கதிரின்
மேயவித்தான் மூவராகும் விளம்பியதென்
தூயஇப் பாட்டுக் கருத்தம் சொல்."
இப்பாட்டில்,

ஒண்கமலம் வாழ்ந்து அன்னமாகி - நெல்லுக்கும் பிரமனுக்கும் சிலேடை
உரலணைந்து தண்கயநீர்த்தூங்கி - நெல்லுக்கும் திருமாலுக்கும் சிலேடை
ஏறூர்ந்து ஒண்கதிரின் மேயவித்தால்-நெல்லுக்கும் சிவனுக்கும் சிலேடை

"சொல்" என்பதற்கு "நெல்" என்று பொருளுண்டு. "இப்பாட்டுக் கருத்தம் சொல் என்றால்", "இப்பாட்டுக் கருத்தம் நெல்" என்பது
பொருளாகும்.


மீனாட்சிசுந்தரத்தின் 15ம் வயதில் தந்தை சிதம்பரம் பிள்ளை காலமானார். அவர் தந்தை இறந்த ஆண்டின் பெயர் "விரோதி". "விரோதி" என்னும் சொல்லை இருபொருளில் அமைத்து அவர் எழுதிய வெண்பா, இளம் வயதிலேயே அவரின் கவிபாடும் ஆற்றலுக்குச் சான்றாக உள்ளது. அவ்வெண்பா வருமாறு:

"முந்தை அறிஞர் மொழிநூல் பல நவிற்றும்
தந்தை எனைப் பிரியத் தான்செய்த- நிந்தை மிகும்
ஆண்டே விரோதியெனும் அப்பெயர் நிற்கே தகுமால்
ஈண்டேது செய்யாய் இனி."

சோமரசம்பேட்டையில் இருந்தபோது காவேரியாச்சி என்ற பெண் இவரின் வாழ்க்கைத் துணைவியானார். தமிழ்ப் புலவர்களைக் கண்டு உரையாடுவதற்கும், தம் ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பாகத் திருச்சி மலைக்கோட்டை கீழவீதியில் குடியேறினார். முத்துவீரியம் என்னும் இலக்கண நூலைச் செய்த,
முத்துவீர வாத்தியார்
திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார்
முதலான புலவர்களுடன் அளவளாவும் வாய்ப்பினைப் பெற்றார். வெளியூர்ப் புலவர்கள் இவரைத் "திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை" எனக் குறிப்பிட்டனர்.
மலைக்கோட்டை மெளனமடம் வேலாயுத முனிவர்
காஞ்சிபுரம் சபாபதி முதலியார்
திருவம்பலம் தின்னமுதம் பிள்ளை
மழவை மகாலிங்கையர்
ஆகிய தமிழ்ப் புலவர்களை அணுகித் தம் ஐயங்களைப் போக்கிக் கொண்டார்.
எழுத்து
சொல்
பொருள்
யாப்பு
அணி
ஆகிய ஐந்திலக்கணங்களையும் தக்கவரிடம் பாடங்கேட்டார்.



திருவாவடுதுறை அம்பலவாண முனிவரிடம் கம்பரந்தாதியையும்
கீழ்மேலூர் சுப்பிரமணிய தேசிகரிடம் குட்டித் தொல்காப்பியம் என்று அழைக்கப்படும் இலக்கண விளக்கத்தையும் பாடங்கேட்டார்.


இதனால் அவர் தமிழ்ப் புலமை மேலும் சிறப்புற்றது.
பல சிவத்திருத்தலங்களுக்குச் சென்று, அத்தலங்களைப் பற்றித்
தலபுராணங்களும்
பதிகங்களும்
அந்தாதிகளும்
அங்குள்ள இறைவன், இறைவி மீது பிள்ளைத்தமிழ்
கலம்பகம்
கோவை
உலா
தூது
குறவஞ்சி
முதலான நூல்களும் இயற்றினார்.


1851ல் திரிசிரபுரத்திலிருந்தவர்கள் விரும்பிய வண்ணம் சைவ எல்லப்ப நாவலர் இயற்றிய "செவ்வந்திப்புராணம்" என்னும் நூலைப் பதிப்பித்தார்.


1860 முதல் மாயூரத்தில் வசிக்கத் தொடங்கி, அங்கிருந்து அடிக்கடி திருவாவடுதுறை மடத்திற்குச் சென்று வந்தார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை. திருவாவடுதிறை ஆதீன வித்துவானாக நியமிக்கப்பட்டார். ஆதீனகர்த்தர் அம்பலவாணதேசிகர் மீது கலம்பகம் பாடினார். ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு "மகாவித்துவான்" என்ற பட்டத்தை வழங்கி மகிழ்ந்தார். அன்று முதல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.


1871ல் உ.வே.சாமிநாதய்யர் மகாவித்துவானின் மாணாக்கரானார். இறுதிவரைத் தம் ஆசானோடிருந்து பல்வேறு நூல்களைப் பாடங்கேட்டார். மகாவித்துவான் திருவாவடுதுறையிலிருந்து பட்டீஸ்வரம், திருப்பெருந்துறை, குன்றக்குடி முதலிய தலங்களுக்குச் சென்றுவந்தார்.


பிள்ளையவர்கள் 1876ல் நோய்வாய்ப்பட்டார். மாணாக்கர் சவேரிநாத பிள்ளை மார்பில் சாய்ந்த வண்ணம், திருவாசம் படிக்குமாறு கூறினார். உ.வே.சா திருவாசகம் அடைக்கலப்பத்தைப் பாட, 1.2.1876ல் தம் 61ம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் கம்பன்
இணையிலாப் புலவன்
மெய்ஞானக் கடல்
நாற்கவிக்கிறை
சிரமலைவாழ் சைவசிகாமணி
முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றார்.
தலபுராணங்கள் 22
சரித்திரம் 3
மான்மியம் 1
காப்பியம் 2
பதிகம் 4
பதிற்றுப்பத்தந்தாதி 6
யமக அந்தாதி 3
மாலை 7
பிள்ளைத்தமிழ் 10
கலம்பகம் 2
கோவை 3
உலா 1
தூது 2
குறவஞ்சி 1
பிறநூல்கள் 7
என இவர் செய்துள்ள மொத்த நூல்கள் ஏறத்தாழ 80. மேலும் பல தனிச் செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.

"பார்கொண்ட புகழ் முழுதும் ஒருபோர்வை
எனப் போர்த்த பண்பின்மிக்க
ஏர்கொண்ட மீனாட்சி சுந்தரவேள்." - என்று சி.சாமிநாததேசிகர் பாராட்டுவது பொருத்தமே.

எழுதிய நூல்கள்

இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன.

  1. திருவானைக்காத் திருபந்தாதி
  2. திரிசிராமலை யமகவந்தாதி
  3. தில்லையமக அந்தாதி
  4. துறைசையமக அந்தாதி
  5. திருவேரகத்து யமக அந்தாதி
  6. திருக்குடந்தை திருபந்தாதி
  7. சீர்காழிக்கோவை
  8. குளத்தூக்கோவை
  9. வியாசக்கோவை
  10. அகிலாண்டநாயகி மாலை
  11. சிதம்பரேசர் மாலை
  12. சேக்கிழார் பிள்ளைத் தமிழ்
  13. திருநாகைக்க்ரோண புராணம்

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை



"பாட்டின் திறத்தாலே வையத்தைப் பாலிக்கப் பிறந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். மக்கள் கவியாக விளங்கி ஏழை எளிய மக்களுக்காகவே பாடிய கவிஞர்.

திரையுலகப் பாடல்கள் பட்டிருந்த கறை நீக்கி, மக்கள் நெஞ்சம் நிறைவுறவும், வியத்தகு செந்தமிழில் எளிமையாக அருமையான கருத்துக்கள் கொண்ட பாடல்கள் எழுதி குறுகிய காலத்தில் புகழ் அடைந்தவர் பட்டுக்கோட்டை. தமிழக ஏழை உழைப்பாளிகளும், அறிவால் உழைக்கும் இடைநிலை மக்களும் தங்களுக்காக திரையுலகிலே குரல் கொடுத்துத் தங்கள் வாழ்வை மேம்படுத்த முன்னின்ற பாடலாசிரியரை இவரிடம் கண்டனர்.

தனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா

என்றும்

காயும் ஒருநாள் கனியாகும் - நம்
கனவும் ஒருநாள் நனவாகும்
காயும் கனியும் விலையாகும்

என்றும் நம்பிக்கை தந்தார்.

உழைப்பை மதித்திதுப் பலனைக் கொடுத்து
உலகில் போரைத் தடுத்திடுவோம்!
அண்ணன் தம்பியாய் அனைவரும் வாழ்ந்து
அருள் விளக்கேற்றிடுவோம்

என்று உலகளாவிய அன்புணர்வோடும், உண்மையுணர்ச்சியோடும் திரையுலகின் வழியாக உரத்த குரலை எழுப்பினார். மறைந்து கொண்டிருந்த தமிழ்த் தென்பாங்கு, சிந்து, இலாவணி போன்ற நாட்டுப் பாடல்களின் கூட்டிசைக்குப் புத்துயிரூட்டத் திரையுலகில் தனக்குக் கிடைத்த பத்தாண்டு எல்லையில் மற்றவர்கள் நூற்றாண்டு எல்லையில் செய்ய முடியாத செயலைச் செய்து, மிக சிறிய வயதில் இயற்கை எய்தினார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் காற்றிலே மிதக்கும் கவிதைகளாக மட்டுமல்லாது, ஏட்டில் சிறப்புறும் இலக்கியமாகவும் இருக்கின்றன. திரைப் பட கவிஞர்களில் இவரைப் போன்ற சமூக மறுமலர்ச்சி மக்கள் கவிஞரை, புதிய சமதர்ம சமுதாய இலட்சியக் கவிஞரை நாம் கண்டதில்லை.

ஒரு சாதாரண உழவர் குடும்பத்தில் பிறந்த இவர் (13-4-1930), உழவுத் தொழிலில் முனைந்து, படிப்படியாய் கவிதைகள் இயற்றி புலவர் மணியாய்த் திகழ்ந்து மிகச் சிறியவயதில்(29) இயற்கை எய்தினார். 1951ம் ஆண்டு "படித்த பெண்" எனும் திரைப்படத்திற்கு முதன் முதலாக பாடலை இயற்றித் திரைப்பட உலகில் நுழைந்தார்.

உழவர்கள் படும் துயரத்தைக் கண்டு உள்ளம் உருகி நாடோடி மன்னனில் இவர் எழுதியது:

சும்மாக் கிடந்த நிலத்தைக் கொத்தி, சோம்பலில்லாமல் ஏர் நடத்தி...நெல்லு வெளைஞ்சிருக்கு - வரப்பும் உள்ள மரஞ்சிருக்கு - அட
காடு வெளைஞ்சென்ன மச்சான் - நமக்கு கையுங் காலுந்தான் மிச்சம் ?

தொழிலாளர்கள் பற்றி எழுதியது:

செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம்
சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடி
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்ட உழுது போடு
ஏற்றமுன்னா ஏற்றம் இதிலேயிருக்கு முன்னேற்றம்

குழந்தைப் பாடல்கள் மூலம் நல்ல கருத்துக்களை சொன்னது:

திருடாதே! பாப்பா திருடாதே! வறுமை நிலைக்கு பயந்து விடாதே
சின்னப் பயலே! சின்னப் பயலே! சேதி கேளடா
தூங்காதே தம்பி! தூங்காதே தம்பி, நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
சின்னஞ்சிறு கண்மலர் செம்பவள வாய்மலர்
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே -நீ ஏன் படைத்தோம் என்பதை மறந்துவிடாதே
உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட

தத்துவக் கருத்துகள் சொன்ன பாடல்கள்:

இதுதான் உலகமடா! பொருள் இருந்தால் வந்து கூடும்..
இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே..
நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்..
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே-அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம்-ஒரு கண்ணாயிருக்கனும் அண்ணாச்சி
குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்..
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா..
அது இருந்தா இது இல்லை-இது இருந்தா அது இல்லை..
வீடுநோக்கி ஓடுகின்ற நம்மையே நாடிநிக்குதே அநேக நன்மையே
அறம் காத்த தேவியே-குலம் காத்த தேவியே-நல் அறிவின் உருவமான ஜோதியே

காதல் பாடல்கள்:

துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்..
அன்பினாலே உண்டாகும் இன்பநிலை-அதை அணைந்திடாத தீபமாக்கும் பாசவலை
உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது
முகத்தில் முகம் பார்க்கலாம்-விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே கொள்ளும் இன்பமே
இன்று நமதுள்ளமே - பொங்கும் புது வெள்ளமே
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா ?
வாடிக்கை மறந்ததும் ஏனோ - என்னை வாட்டிட ஆசைதானோ
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று
ஆசையினாலே மனம் -ஓஹோ - அஞ்சுது கொஞ்சுது தினம்
துள்ளித் துள்ளி அலைகளெல்லாம் என்ன சொல்லுது
ஆடை கட்டி வந்த நிலவோ-கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
கொக்கரக் கொக்கரக்கோ சேவலே- கொந்தளிக்கும் நெஞ்சிலே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ இளையவளா மூத்தவளா

பட்டுக்கோட்டை பல கஷ்டங்களுக்கிடையே, தன் சுயமுயற்சியாலும், இலட்சியத் தெளிவாலும் திரையுலகின் உன்னத நிலையைய் அடைந்தார். சினிமாவில் பெரும் புகழ் அடைந்த போதும், அவர் எப்போதும் விவசாய இயக்கத்தையும், கம்யுனிஸ்ட் கட்சியையும் மறந்த்ததில்லை. தான் பின்பற்றிய கட்சியின் இலட்சியத்தை உயரும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது பாடுபட்டார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் காலத்தால் மறையாது என்றென்றும் நிலைத்து நிற்கும்."

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிள்ளை வரிகள்




1) தனியுடமை
கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா...


2) திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

3) ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி

4) குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா – இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்
திருட்டு உலகமடா – தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா – இதயம்
திருந்த மருந்து சொல்லடா.

5) ஆடைகட்டி வந்த நிலவோ – கண்ணில்
மேடைகட்டி ஆடும் எழிலோ – குளிர்
ஓடையில் மிதக்கும் மலர்
ஜாடையில் சிரிக்கும் இவள்
காடுவிட்டு வந்த மயிலோ – நெஞ்சில்
கூடுகட்டி வாழும் குயிலோ?

வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள்

on Saturday, December 11, 2010

ப்ரவாஹன்

சதுரகிரி வேள் அவர்கள், நெல்லை நெடுமாறனும் அ. கணேசனும் சேர்ந்து எழுதியுள்ள 'அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை' என்பது குறித்த தனது கருத்துக்களை கடித வாயிலாகத் தெரியப்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நால்வருணம் இல்லை என்று வரிந்து கட்டிக் கொண்டு மற்றோர் கடிதத்தையும் எழுதியுள்ளார்.

நால்வர்ணம் குறித்து தமிழகத்தில் வேளாளர்களின் நிலைப்பாடு எப்படிப்பட்டது என்பதை வே. கனகசபைப்பிள்ளை, '1800 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகம்' என்ற நூலில் துலக்கமாகக் காட்டுகிறார். தொல்காப்பியம் கூறும் நால்வருண இலக்கணம் குறித்து அவர் கூறுகையில் "இதுதான் தமிழர்களை தங்கள் சாதி அமைப்புக்குள் கொண்டுவர பிராமணர்கள் செய்த முதல் முயற்சி. ஆனால், தமிழகத்தில் க்ஷத்ரிய, வைசிய, சூத்திர சாதிகள் இல்லாததனால் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை. மேலும் இதுநாள் வரையிலும் தன்னை க்ஷத்ரியன் என்று சொல்லிக்கொள்கிற ஒரு படையாச்சி அல்லது வைசியர் எனுந் தகுதிக்குரிய ஒரு வணிகர் வீட்டில் வெள்ளாளர்கள் உணவருந்தவோ தண்ணீர் குடிக்கவோ மாட்டார்கள்” என்கிறார். இதன் பொருள் நால்வர்ணம் இருக்கவேண்டும், அதை நாங்கள் திட்டவட்டமாகக் கடைப்பிடிப்போம். ஆனால் நால்வர்ணத்தைப் புகுத்தியதாகப் பழியை மட்டும் பிராமணர் மீது போடுவோம் என்பதுதான். இத்தகைய முரண்பாடு தமிழக வேளாளர் சமூக அறிஞர்களின் மனோநிலையில் இயல்பாகவே அமைந்திருக்கிறது என்று கருதுகிறேன். சதுரகிரி வேளின் நிலைப்பாடும் கனகசபைப் பிள்ளையின் நிலைப்பாட்டைப் பின்பற்றியுள்ளதுதான்.

தங்களுக்குச் சாதகமானவற்றின் மீது மட்டும் கருத்துக்களைக் கூறிவிட்டு முரணாக இருப்பதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது அல்லது அத்தகைய உண்மைகளுக்கே (விளக்கங்களுக்கு அல்ல) உள்நோக்கம் கற்பிப்பது என்பதைத் தொடர்ந்து இத்தகைய ஆதிக்க சக்திகள் செய்துவருகின்றனர்.

முதல் கடிதத்தில் வேளாளர்கள் பிள்ளை என்ற பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று சதுரகிரி கூறியிருப்பது சரியே. அதை அவர்கள் கைப்பற்றிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு மட்டுமே உரியது. தங்களை மூவேந்தர்கள் என்றும் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர் என்றும் அவர்கள் கோரிக்கொள்ள விரும்புவதற்கு முரண்பாடாக இந்த பிள்ளைப் பட்டம் இருக்கிறது என்பதைக்கூட விளங்கிக் கொள்ள முடியாத அளவிற்குத் தங்களுக்குக் கிடைத்துள்ள அரசியல் ஆதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் மனோநிலை வேளாளர்களிடம் ஊறியிருக்கிறது. அரசரின் சட்டபூர்வமான ஆண் வாரிசுகள் தங்களை இளவரசன் அல்லது இளங்கோ என்றே கூறிக் கொள்வர்.

தமிழக மூவேந்தர்கள் சூரிய-சந்திர குலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் கிடைத்துள்ள அனைத்து கல்வெட்டுகளும் பிற ஆவணங்களும் இதை உறுதி செய்கின்றன. ஆனால் வேளாளர்களோ கங்கை குலத்தவர்கள் அல்லது நதிக்குலத்தவர்கள். இந்த நதிக் குலத்தவர்கள் தங்களை வேளிர் என்றும் மூவேந்தர்கள் என்றும் கூறிக்கொள்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? எந்த இடத்திலாவது மூவேந்தர்கள் தங்களை நதிக்குலத்தவர்களாக, கங்கை குலத்தவர்களாக கூறிக்கொண்டது உண்டா? அதுபோலவே வேளிர் என்போர் யது குலத்தவர் ஆவர். மேலும், சூத்திர வருணத்தவர் ஆன வேளாளர்களுடன் சூரிய-சந்திர குல க்ஷத்ரியர்களான மூவேந்தர்கள் மண உறவு வைத்திருந்தனர் என்று கூறுவது 13-14 ஆம் நூற்றாண்டைய உரையாசிரியர்கள் சங்ககால இலக்கிய வரிகள் மீது தங்கள் சமகால நிலவரத்தைச் சார்த்தி எழுதிய ஒன்றே தவிர வேறில்லை.

சங்க காலந்தொட்டு வேளாளர்களின் கடமைகள் அல்லது தொழில்கள் என்ன? இலக்கியங்களும் நிகண்டுகளும் சொல்கின்றபடி, வேளாளர்களின் முக்கிய கடமை மூன்று மேல் வருணத்தார்க்கும் ஏவல் செய்வது. மூவேந்தர்கள் மணவுறவு வைத்திருந்தனர் என்று கூறுவது ஆதாரமற்றது. மாறாக, எம் குலப்பெண்களை மூவேந்தர்கள் எம்மை இழிவு படுத்தினர் என்ற கோபத்தினால்தான் களப்பிர அரசர்கள் மூவேந்தர்களை சிறை செய்து தங்களைப் புகழ்ந்து பாடச் செய்ததற்குக் காரணம் என்று கூறினால் அது நியாயமாக இருந்திருக்கும். அரித்துவாரமங்கலம் பட்டயத்தை மேற்கோள் காட்டி நெல்லை நெடுமாறன், அ. கணேசன் ஆகியோர் கூறுவது தர்க்கபூர்வமாகவே உள்ளது.

மேலும், வேளாண்மை என்பதன் பொருள் என்ன? சங்க காலம் முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையுள்ள பல்வேறு நூல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள வேளாண்மை என்ற சொல்லுக்கு உபகாரம் என்றே பொருள். உழவுத் தொழிலைப் போற்றுகின்ற திருக்குறளிலும் கூட வேளாண்மை என்ற சொல் உபகாரம் என்ற பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிகண்டு நூல்கள் முக்கியமான வரலாற்று ஆவணங்களாகும். 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேந்தன் திவாகரம் முதலில் வந்த நிகண்டு ஆகும். அதன் பின்னர் இயற்றப்பட்ட பிங்கலந்தை, சூளாமணி, வடமலை நிகண்டு, பாரதி தீபம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டு வீரமாமுனிவரின் சதுரகராதி உட்பட அனைத்து நிகண்டுகளிலும் வேளாண்மை என்ற சொல்லுக்கு உபகாரம், மெய் உபசாரம் என்றே பொருள் கூறப்பட்டுள்ளதே தவிர விவசாயம் என்றல்ல. வேளாளர்களை வேளிர்களுடன் தொடர்புபடுத்துவதைவிட வேளத்துடன் தொடர்புபடுத்துவது பொருத்தமாகத் தெரிகிறது.

வேளாண்மை என்பதற்கு விவசாயம் என்று பொருள் கொண்டு அதனடியாக நிலக்கிழார்கள் என்றும் எனவே வேளாளர்தான் வேளிர் (குறுநில மன்னர்) என்று சதுரகிரியைப் போன்றவர்கள் கோருகின்றனர். வேளாளர்கள் உழுதுண்போர், உழுவித்துண்போர் என்பதாகப் பிற்காலத்தில் பிரிக்கப்பட்டுள்ளனர் என்பதும் ஒரு வரலாற்று உண்மை. இதில் உழுவித்துண்போர் என்பவர்கள் நிலத்தின் உரிமையாளர்கள் அல்ல. மாறாக, அவர்கள் காராளர் என்ற தகுதி உடையோர் மட்டுமே. இந்தக் காராளர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், ஐரோப்பிய நிலப்பிரபுத்துவத்தில் செய்வது போலவே, தங்கள் பகுதிக்கு நிலத்தின் உரிமையாளரான வேந்தர் அல்லது நிலப்பிரபு அல்லது ஆட்சியாளர் வருகை புரிகையில் அவர்க்குத் தேவையான அனைத்து உபசாரங்களையும் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் நால்வருணம் இல்லையென்று பல வரலாற்று ஆசிரியர்கள் வலிந்து கூறிவருகின்றனர். ஆனால் புறநானுற்றுப் பாடல் குறிப்பிடுகின்ற, வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் ... என்பதில் தொடங்கி தொல்காப்பியம் நான்கு வர்ணங்களையும் அவர்களின் கடமைகள் மற்றும் உரிமைகளையும் வரையறுத்துள்ளது. தொடர்ந்து வந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, பிற நீதி நூல்கள் என்று தொடர்ச்சியாக நால்வர்ணங்கள் குறித்த குறிப்பில்லாத நூல்களைக் காட்ட முடியுமா? வேளாளர்களை சதுர்த்தர் என்று குறிப்பிடாத நிகண்டுகளையாவது காட்டமுடியுமா? மேலும் நால்வர்ண இலக்கணத்திற்கு மாறாக தமிழக வரலாற்றில் நிகழ்ந்தவை எவையெவை என சதுரகிரி வேள் அவர்கள் பட்டியல் இடட்டும். நால்வர்ண இலக்கணத்தை ஒட்டி நிகழ்ந்தவைகள் எவையெவை என நான் பட்டியல் இடுகிறேன். எது அதிகம் என்பதை அவர்களே முடிவு செய்யட்டும்.

தமிழகத்தில் நான்கு வர்ணங்கள் இருக்கிறது என்பதை நன்கு அறிந்து கொண்ட வேதாசலம் பிள்ளை (மறைமலை அடிகள்) அவர்கள் அதைச் சரிக்கட்டுவதற்காக என்ன பாடுபடுகிறார் பாருங்கள். வர்ணத்தையே நாங்கள்தான் உருவாக்கினோம் என்று கூறிவிட்டார். சாதியையும் நாங்களே உருவாக்கினோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். வேளாளர் நாகரிகம் என்ற தனது நூலில், "தமிழகத்தில் முதன்முதல் உழவுத் தொழிலைக் காணும் நுண்ணறிவும், அதனாற் கொலைபுலை தவிர்த்த அறவொழுக்கமும், அதனாற் பெற்ற நாகரீகமும் உடைய தமிழ் மக்கள் எல்லாரினுஞ் சிறந்து விளங்கித் தம்மினின்று அந்தணர், அரசர் எனும் உயர்ந்த வகுப்பினர் இருவரையும் அமைத்து வைத்து, அறவொழுக்கத்தின் வழுவிய ஏனைத் தமிழ் மக்களெல்லாந் தமக்குந் தமதுழவுக்கும் உதவியாம்படி பதிணென் டொழில்களைச் செய்யுமாறு அவர்களை அவற்றின் கண் நிலைபெறுத்தித் தமிழ் நாகரிகத்தைப் பண்டு தொட்டு வளர்த்துவரலாயினர்” என்பார். அப்பதிணென் வகுப்பினர் கைக்கோளர், தச்சர், கொல்லர், கம்மாளர், தட்டார், கன்னார், செக்கார், மருத்துவர், குயவர், வண்ணார், துன்னர், ஓவியர், பாணர், கூத்தர், நாவிதர், சங்கறுப்பர், பாகர், பறையர் ஆகியன. இச் சாதிகளை பலபட்டடைச் சாதிகள் என்றும் அவர் கூறுகிறார். இவர் குறிப்பிடுகின்ற சாதிகள் சங்க இலக்கியத்தில் உயர்ந்தவையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

"துடியன். பாணன். பறையன். கடம்பன் இந்நான்கல்லது குடியுமிலவே” என்கிறது புறநானூறு. ஆனால், வேளாளர்களோ பிற்காலத்தில் கரணம் அமைந்த பிறகுதான் குடியானார்கள் என்பதை தொல்காப்பியம் தெளிவுற எடுத்துரைக்கின்றது. சங்க காலத்தில் பறையர்களில் ஒரு பிரிவான அறிவர்கள் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர். ("பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே” - தொல்) குயவர் எனப்படும் மட்பாண்டக் கைவினைஞர்களை சங்க இலக்கியம் 'வேட்கோவர்’ என்று குறிப்பிடுகிறது. வேட்கோவர் என்போர் வேள்வி செய்யக்கூடிய தகுதியுடையோர். சங்க இலக்கியங்களின்படி கண்மாளர்கள் சூத்திரர் அல்ல. விஸ்வகர்மா என தங்களைக் கூறிக்கொள்ளுகிற இவர்கள், தாங்களே உண்மையான அந்தணர் என்பதை நிரூபிப்பதற்காக மிகவும் பிற்காலத்திலும் கூட நீதிமன்றம் சென்று வழக்காடிய வரலாறு உண்டு. அதுதான் புகழ்பெற்ற 'சித்தூர் ஜில்லா அதாலத்’ எனப்படுகிறது. மேலும் தாங்களே சோழ அரசர்களின் குலகுருக்கள் என கம்மாளர்கள் தொடர்ந்து கோரிவந்துள்ளனர். இந்த இடத்தில் மரபாக இருந்து வருகின்ற சில சமூக மோதல்களை நாம் கவனத்தில் கொள்வது ஆர்வத்திற்குரியது. அதாவது தமிழ்ச் சமூகத்தில் கம்மாளர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இடையிலான இந்த மோதல் மட்டுமின்றி, பார்ப்பனர்களுக்கும் பறையர்களுக்கும் இடையில் தாங்களே உண்மையான அந்தணர்கள் என்கிற சண்டை தொடர்ந்து இருந்துவந்துள்ளது. அதுபோலவே பறையர்களுக்கும் கம்மாளர்களுக்கும் இடையிலும் சண்டை இருந்துவந்துள்ளது. நாவிதர் மற்றும் மருத்துவர் எனப்படுகின்ற சாதியினர், அம்பட்டர் என்ற பெயரில் அந்தணப் பிரிவில் இருந்துள்ளனர். இன்றைக்கும் வைணவக் கோயில்களின் பூசாரிகள் 'பட்டர்’ என்றே அழைக்கப்படுகின்றனர். அமாத்தியரான அம்பட்டர்கள் குறித்து தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், "அமாத்திய நிலையும் சேனாபதி நிலையும் பெற்ற அந்தணாளர்க்கு அரசர் தன்மையும் வரைவில் வென்றவாறு” என்கிறார்.

இவை இங்ஙனமிருக்க வேளாளர்களை நான்காம் பிரிவினராக சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. "மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே” என்கிறது தொல்காப்பியம். இதன்பொருள், மணவினைச் சடங்குகள் இன்றி இருந்த நான்காம் வர்ணத்தவரான வேளாளர்களுக்கு மணவினைச் சடங்குகள் பின்னர் ஏற்படுத்தப்பட்டன என்பதாகும். மனுதர்மத்தில் சூத்திரர்களுக்கு திருமணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதை இத்துடன் ஒப்பிட்டுக் காணலாம். இவ்வாறு வேளாளர்களுக்கு மணவினைச் சடங்கு ஏற்படுத்தப்பட்டு இறுக்கமான குடும்ப அமைப்புக்குள் அவர்கள் கொண்டுவரப்பட்டதால் அவர்களும் குடி என்ற நிலைக்கு உயர்ந்தனர். இவ்வாறு குடி என்கிற நிலைக்கு மிகவும் பிற்காலத்தில் வந்ததாலேயே, உழுதுண்போரான வேளாளர்களை அடியற்றி உழவர்களை 'குடியானவன்’ என்று சொல்லுகின்ற வழக்கு நிலைபெற்றது.

வேளாளர்கள் காராளர்களாகி, களப்பிரர் ஆட்சிக்குப் பின்னர் நிலவுடைமையாளர்களாக ஆகிவிட்ட பின்னரும், வேளாளர் குலத்தில் உதித்து சோழ அரசனின் அமைச்சராக இருந்த சேக்கிழார், "நீடு சூத்திர நற் குலஞ்செய் தவத்தினால்” (இளையான்குடி நாயனார் புராணம்-1) எனவும் "தொன்மை நீடிய சூத்திரத் தொல்குல” (வாயிலார் நாயனார் புராணம்-6) எனவும் சூத்திரராகவே குறிப்பிட்டுள்ளார். வேளாளர்கள் எழுச்சி பெற்றுவிட்ட கி.பி.7 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தொகுக்கப்பட்ட நிகண்டுகள் வேளாளரை, 'சதுர்த்தர்’ என்று குறிப்பிடுகின்றன. சேந்தன் திவாகரம், வேளாளர் அறு தொழிலில், 'இருபிறப்பாளர்க் கேவல் செயல்’ என்கிறது. வேளாளர் பத்துவகைத் தொழிலில் 'ஆணைவழி நிற்றல்’ என்றுரைக்கிறது. அடுத்து வந்த பிங்கலந்தை நிகண்டு, வேளாளர் பத்துவகைத் தொழிலில் 'ஆணை வழி நிற்றல்' என்கிறது. மிகவும் பிற்காலத்தில் தொகுக்கப்பட்ட வீரமாமுனிவரின் சதுரகராதி, சூத்திரர் தொழில், 'மூவர்க்கேவல் செயல்’ என்கிறது. கி.பி. 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புறப்பொருள் வெண்பாமாலை வேளாண் வாகையில் 'மூவர்க்கு ஏவல்’ வேளாளரின் கடமையென்கிறது. தொல்காப்பியம் 'வேளாண் பெருநெறி’ என்று குறிப்பிடுவதன் பொருள் விருந்தோம்பல். 19 ஆம் நூற்றாண்டில் நெல்சன் என்ற ஆங்கிலேயர் தொகுத்த Madura Manual என்ற நூலில் இது பற்றிய விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.

வேதாசலம் பிள்ளை, கனகசபை பிள்ளை போன்ற வேளாளர் சமூக அறிஞர்களின் நிலைப்பாடு, புலிக்கு பயந்தவனெல்லாம் என் மீது படுத்துக்கொள்ளுங்கள் என்று கூப்பாடு போட்டவனின் கதைதான். மேலே படுத்தவனையெல்லாம் புலி அடித்துவிட்டது. ஆனால், அடியில் படுத்துக்கொண்டவன் தந்திரமாகத் தப்பித்துவிட்டான் என்பது கதை. அதைப்போல, வெள்ளாளர்கள் தாங்கள் சூத்திரர் என்பதை மறைப்பதற்காக, அக்னி குல க்ஷத்ரியர்களான வன்னியர்களையும், சங்க காலத்தில் அந்தணருக்குச் சமமாக இருந்த பறையர்களையும், கம்மாளர்களையும், வேட்கோவர்களான குயவர்களையும், செல்வச் செழிப்பில் இருந்த வைசியர்களான செட்டியார்களையும் இன்னும் சில சாதியினரையும் சூத்திரர் ஆக்கிவிட்டனர். இதற்காக தமிழகத்தில் பார்ப்பனர் சூத்திரர் என்ற இரண்டே பிரிவுகள்தான் என்று மீண்டும் மீண்டும் கோயபல்ஸ் பாணியில் எழுதி நிலைநாட்டியிருக்கின்றனர். இப்போது அந்த அடித்தளம் ஆட்டம் கண்டுவிடுமோ என்ற அச்சத்தில்தான் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றனர்.

போரில் ஈடுபடுவதனால் அல்லது அரசாட்சிக்கு வந்துவிடுவதால் மட்டும் க்ஷத்ரிய அந்தஸ்து கிடைத்து விடாது. மன்னர் கொடுப்பாராயின் இடையிரு வகையோருக்கும் படையும் ஆயுதமும் வழங்கப்படும் என்பது தொல்காப்பியம் குறிப்பிடும் மரபு. இருப்பினும் அவர்கள் வைசியர்களாகவும் சூத்திரர்களாகவுமே இருப்பார்களேயன்றி க்ஷத்ரியர் ஆகிவிடமுடியாது. அரசன்தான் அனைத்தையும் முடிவு செய்பவன் என்பதையும், பார்ப்பனர்கள் அல்ல என்பதையும் வள்ளுவர் தெளிவாக எடுத்துரைக்கிறார். "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் /நின்றது மன்னவன் கோல்” என்பது குறள். இதன் பொருளை உணர்ந்தால், சமூகத்தின் நன்மைகளுக்கு மட்டுமல்ல தீமைகளுக்கும் க்ஷத்ரியர்கள் பொறுப்பேற்க வேண்டிய கடமை உண்டு.

இது தொடர்பாக இன்னும் எத்தனையோ விசயங்களை எடுத்து வைக்கமுடியும் என்றாலும் தற்போது எனக்கிருக்கின்ற பல்வேறு பணிகளுக்கிடையில் ஒழுங்கற்றமுறையில் இதை முன்வைப்பதற்காக வாசகர்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

பிற்குறிப்பு: எந்த சாதியினர் மூவேந்தர் என்பது குறித்து எனக்கு எவ்வித கவலையும் கிடையாது. ஆனால் வரலாற்று உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்கிற ஒரே விருப்பம் உடையவன் என்கிற முறையில் ஒரு பொய்மையைத் தகர்ப்பதற்கான எனது சிறு முயற்சியே இக்கடிதம்.

Famous Vellala Pillai's

on Tuesday, December 7, 2010
ITHU SUMMA SAMPLE THAN MAIN NEXT

Historical Personalities

• Arunachala Kavi
• Nammalvar

Freedom fighters and social leaders

• Maruthanayagam Pillai (1725-1764) Commandant for the British East India Company, later became Administrator for Madurai. Also known as Muhammed YusufKhan
• V. O. Chidambaram Pillai (1872-1936), famous Indian freedom fighter, the man who first supported a Scheduled Caste sage Swami Sahajaanantha,Founder of first Indigenous Ship Company against British rule.
• Jeeva,Communist Leader
• L. D. Swamikannu Pillai, Indian astronomer,former Speaker of Tamil Nadu Assembly
Bureaucrats
• Ananda Ranga Pillai, a dubash in the service of French East India Company
• Navanethem Pillay, South African Judge, UN High Commissioner for Human Rights
• Devasahayam Pillai (1712-1752), Indian court official, controversial convert to Christianity
• Pradani Muthirulappa Pillai, a famous minister of Ramnad during the reign of Muthuramalinga Sethupathy Academicians
• Subbayya Sivasankaranarayana Pillai (1901-1950), Indian mathematician
• Dr. Sivathanu Pillai[7], Head of Defence Research and Development Organisation

Tamil literature

• Kavimani Desigavinayagam Pillai, Eminent Tamil poet
• Namakkal Kavignar Ramalingam Pillai,Famous Poet, freedom fighter
• Manonmaniam Sundaram Pillai, eminent writer in Tamil literature; his poem "Niraarum Kadal Udutha" is the official Tamil Anthem
• Maraimalai Adigal
• C. W. Thamotharampillai, publisher of ancient Tamil texts
• Pudhumaipithan, revolutionery writer from Tirunelveli Saiva Pillai community
• Jayakanthan ,A Tamil writer

Sports

• Dhanraj Pillay (born 1968), Indian hockey player

Arts and cinema

• S. A. Chandrasekhar, Film Director
• Dharani, Film Director
• Joseph Vijay, Film Actor
• Sripriya, Film Actress.
• Vadivelu, Film Actor
• Vikraman, Film Director

Spiritual

• Ramalinga Swamigal, known as Vallalar, Saint and author of Thiruvarutpa; born to Ramayyah Pillai
• Arumuka Navalar, born as Kandar Arumugam Pillai, a Hindu reformer
• S. Kanapathipillai, Hindu revivalist.

கணித மேதை சிவசங்கர நாராயண பிள்ளை (எஸ்.எஸ்.பிள்ளை)

on Saturday, December 4, 2010


'கணக்குன்னாலே எனக்குக் கசப்பு' என்றான் ஒரு மாணவன்.
"ஏன்' என்று கேட்டபோது, ""அதில் வரும் தேற்றங்களையும் (தியரம்) எண்கள், சமன்பாடுகளையும் மனனம் செய்வது கடினமாக இருக்கிறது'' என்றான்.


"கணிதம் - மனனம் செய்து படிக்கும் பாடமல்ல; அது சுவாரஸ்யமான, அடிப்படையைத் தெரிந்துகொண்டு நாமே உருவாக்கும் கற்பனை சமாசாரம்'' என்று புரியவைக்க முயன்றேன். காரணம் அடியேனும் ஓர் கணித மாணவன் என்பதால்!


பொதுவாகவே, கணிதம் பயில்பவர்களுக்குக் கற்பனைவளம் சேர்ந்தே வரும். அதனால் கொஞ்சம் கவிதையும் வரும். அப்படிப் பலரை நான் கண்டிருக்கிறேன்.


சிறுவயதில் எனக்குள் கணித ஆர்வம் துளிர்விடக் காரணமாக அமைந்தவர், ஒருவர். எங்கள் ஊர்க்காரர். உலகப்புகழ் பெற்றவர்.


செங்கோட்டை அரசு ஆரியநல்லூர் பள்ளியில் மாணவனாகப் பயின்றபோது, ஊரின் நடுவிலுள்ள முத்துசாமிப் பூங்காவில் அடிக்கடி விளையாடி மகிழ்வோம். அப்போது அங்குள்ள "பெஞ்சுகளில்' அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பெரியவர்கள் சிலர், எங்களைக் கூப்பிட்டு அருகில் அமரவைத்து ஒரு கதையைச் சொல்வார்கள். இப்போது அவர்களின் முகங்கள் மறந்துவிட்டாலும், உணர்ச்சிகரமாக அவர்கள் சொன்ன வார்த்தைகள் இன்றைக்கும் பசுமையாய் நெஞ்சில் உள்ளன...



"இதோ இந்தப் பூங்காவின் மையத்தில், இதோ இந்த இடத்தில்தான் எஸ்.எஸ். பிள்ளை என்ற நம்ம ஊர் கணிதமேதை, ஒரு சிறிய குறிப்பு நோட்டுப் புத்தகத்தை விசிறியபடியே தூக்கிக் காட்டி, நண்பர்கள் மத்தியில் இப்படிச் சொன்னார்...


இந்த நோட்டுப் புத்தகத்தில் என்னுடைய ஆராய்ச்சிக் குறிப்புகள் உள்ளன. இதை நான் பிரின்ஸ்டன் மகாநாட்டில் வெளியிடுவேன். அதன் மூலம் இந்தியாவுக்குப் பெரும்புகழ் கிடைக்கும்'' என்றார் எஸ்.எஸ்.பிள்ளை - என்று அவர்கள் கதை சொல்வார்கள்.

அந்தப் பள்ளிப் பருவத்தில் ஃபூரியர் சீரிஸ் பற்றியோ, எண்கணிதம் பற்றியோ எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் அவருடைய வாழ்க்கைச் சம்பவங்கள் மட்டும் கதை வடிவில் என்னை அடைந்திருந்தன. முதிர்ந்த ஆசிரியரான திரு.வி.ஜனார்த்தனம் அவர்களும் எஸ்.எஸ். பிள்ளை பற்றிய கதைகளை அடிக்கடி சொல்வார்.

சிவசங்கர நாராயணப் பிள்ளை என்பதுதான் அவர் பெயர். 1901 ஏப்ரல் 5 இல் செங்கோட்டைக்கு அருகிலுள்ள வல்லத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வி இலத்தூரில். அந்த வேளையில் இவருடைய தந்தை மறைந்துவிட, எதிர்காலம் கேள்விக்குறியானது (முன்னதாக இவர் தாயும் இறந்துவிட்டார்).

அப்போது, தொடக்கப்பள்ளி ஆசிரியரான சாஸ்திரியார் என்பார், தம் சொற்ப வருமானத்திலிருந்து ஒரு தொகையை இவருடைய படிப்புக்காகச் செலவிட்டு, பிள்ளைக்குக் கல்விச் செல்வம் தொடர்ந்து கிடைக்க ஏற்பாடு செய்தார்.


நினைத்துப் பாருங்கள்... அன்றைக்கு ஆசிரியர்களுக்கு எவ்வளவு மிகக் குறைந்த சம்பளம் இருக்கும்! மாணவனுக்குக் கல்வியளிப்பதே சேவை என்ற எண்ணம் கொண்டிருந்த ஆசிரியர்கள் வாழ்ந்த காலம் அது. நமது முன்னாள் ஜனாதிபதியான அப்துல்கலாம் அவர்கள், தமது புத்தகத்தில் "ஒரு துவக்கப்பள்ளி ஆசிரியரால் எப்படி உருவானேன்'' என்பதைக் காட்டும் இடத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்... ஆசிரியப் பணியின் புனிதமும் நோக்கும் தெரியவரும். ஆனால் இன்றைய வர்த்தக உலகில் எல்லாமே தலைகீழாகிவிட்டதே!


இப்படி, சாஸ்திரியாரால் ஊக்கம்பெற்ற பிள்ளை, தொடர்ந்து செங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், நாகர்கோயில் ஸ்காட் மகாராஜா கல்லூரியிலும் பயின்றார். (பி.ஏ). அதன்பிறகு சென்னைப் பல்கலையில் கணிதத் துறையில் ஆராய்ச்சி மாணவராகச் சேர விரும்பினார். அன்றைய சூழலில், பி.ஏ. ஆனர்ஸில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே ஆராய்ச்சி மாணவராகச் சேரமுடியும். ஆனால் இவரோ இரண்டாம் வகுப்பே பெற்றிருந்தார். எனவே பல்கலைக்கழகத்தில் இவருக்கு இடம் மறுக்கப்பட்டது.
அப்போது, பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்த திரு.சின்னத்தம்பிப் பிள்ளை, எஸ்.எஸ். பிள்ளையின் திறமையை உணர்ந்து, பல்கலைக்கழக ஆட்சிக்குழுவில் எஸ்.எஸ். பிள்ளைக்காகக் குரல் கொடுத்தார்.



""நம் பல்கலை, ஏற்கனவே கணிதமேதை ராமானுஜன் விஷயத்தில் அவமானப்பட்டது போதும். மீண்டும் அந்தத் தவறைச் செய்ய வேண்டாம். சாதாரண மாணவர்களுக்காக விதிக்கப்பட்ட விதிமுறைகளை மேதைகளின் மீது திணிக்க வேண்டாமே!'' என்று கேட்டுக் கொள்ள, எஸ்.எஸ். பிள்ளை சென்னைப் பல்கலையில் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்து 4 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எம்.எஸ்.ஸி பட்டம் பெற்றார். பேராசிரியர் அனந்தராவ் என்பவர் கீழ், பிள்ளை ஆராய்ச்சி செய்தாராம்.

பிறகு 1929 இல் அண்ணாமலைப் பல்கலையில் விரிவுரையாளராகச் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினார். அப்போதுதான் எண்கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றார். இதில் சிறப்பம்சம் என்ன என்றால், இந்தியாவிலேயே முதல் முதலாகக் கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பெருமை எஸ்.எஸ். பிள்ளைக்கு உண்டு.


செங்கோட்டை, அந்நாளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அப்போது திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி. ராமசாமி ஐயர், எஸ்.எஸ். பிள்ளையை திருவிதாங்கூர் பல்கலைக் கழகத்திற்கு கொண்டுவர விரும்பினார். அதற்காக எஸ்.எஸ். பிள்ளையைக் கேட்டபோது திவானிடம் அவர் மூன்று நிபந்தனைகளை முன் வைத்தார்.


* அந்நாட்களில் திருவனந்தபுரம் ஆறாட்டு விழாவில், மகாராஜா வேட்டி மட்டும் உடுத்தி உடைவாளோடு நடந்து செல்வார். அந்த விழாவில் அரசு அதிகாரிகள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று சட்டம். பிள்ளையவர்களோ சர்.சி.பி.யிடம் "இந்த ஆறாட்டு விழாவில் கலந்துகொள்ளும்படி தன்னை வற்புறுத்தக் கூடாது' என்று முதல் நிபந்தனையை விதித்தார். இது தன் கையில் இல்லை; மகாராஜாவிடம் கேட்கவேண்டும் என்றார் சர்.சி.பி. (மகாராஜாவும் பிள்ளையின் விருப்பத்திற்கிணங்க அவருக்கு மட்டும் விலக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி)


* இரண்டாவது நிபந்தனை, இந்தியன் சயன்ஸ் காங்கிரஸிற்கு திருவிதாங்கூர் பல்கலைக் கழகத்தின் பிரதிநிதியாகத் தம்மையே அனுப்ப வேண்டும் என்பது.


* மூன்றாவது, தம் ஆராய்ச்சிக்காக, அமைதியான சூழலில் ஒரு குன்றின்மேல் அரசு வீடு ஒதுக்கவேண்டும் என்பது.


இந்த மூன்று நிபந்தனைகளின் பேரில் திருவிதாங்கூருக்குச் சென்று பணியை மேற்கொண்டார் பிள்ளை. இடையில் சர்.சி.பி. வெளிநாடு சென்றிருந்த வேளை, சர்.சி.பியைப் பிடிக்காத அதிகாரிகள் சிலர், வேண்டுமென்றே பிள்ளையவர்களைத் தவிர்த்து வேறொருவரை இந்தியன் சயன்ஸ் காங்கிரஸிற்கு அனுப்பிவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட எஸ்.எஸ். பிள்ளை அடுத்த நிமிடத்திலேயே ராஜினாமாக் கடிதம் ஒன்றை சர்.சி.பி. பெயருக்கு அனுப்பிவிட்டு செங்கோட்டையைப் பார்த்து வந்துவிட்டார். அந்த அளவுக்கு தன்மானம் பார்த்த தமிழராக இருந்தார் பிள்ளை.


பின்னர் இந்த விவரம் அறிந்து வருந்திய சர்.சி.பி., பிள்ளையவர்களை மீண்டும் கொண்டுவர எவ்வளவோ முயற்சித்தும் பிள்ளையின் பிடிவாதத்தைத் தவிர்க்க முடியவில்லை. ""பொய் சொல்பவர்களிடம் என்னால் பணியாற்ற முடியாது'' என்பது பிள்ளையின் பதிலாக இருந்தது.


ஒருமுறை அமெரிக்கக் கணிதமேதை டாக்டர் டிக்ஸன், இவரைக் காண கல்கத்தா பல் கலைக்கு வந்தபோது, அவர் தாம் தங்கியிருந்த ஹோட்டலில் நண்பர்களுக்கு மேலைநாட்டு பாணியில் விருந்தளித்தார். அதில் எல்லோரும் கத்தியையும் முள்கரண்டியும் பயன்படுத்தியபோது, பிள்ளை மட்டும் கையிலேயே எடுத்து உண்டார். இதுபற்றி நண்பர் ஒருவர் கேட்டபோது பிள்ளை சொன்னாராம்...


""என் நாட்டில் என் பழக்கவழக்கங்கள்தான் முக்கியம்.''


""சரி நீங்கள் அமெரிக்கா சென்றால்...?''


""அதை அப்போது பார்ப்போம்!''


- இப்படி தமக்கொன சில கொள்கைகளை வைத்துக் கொண்டு யாருக்காகவும் பிள்ளை விட்டுக் கொடுத்ததில்லை.


சிவசங்கரன் பிள்ளை ஏதாவது வேலை செய்து கொண்டிருக்கும்போது, கணக்குப் புதிர் திடீரெனத் தோன்றினால் மனம் மட்டும் புதிரில் இருக்கும்; உடல் இயக்கமோ அந்த வேலையை ஒட்டி இருக்கும்.



ஒருமுறை செங்கோட்டையிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள திருமலைக்கோயில் முருகன் சன்னிதிக்குக் குடும்பத்தினருடன் சென்றிருந்தபோது, தீபாராதனையின் சமயம் மணி அடிக்க யாரும் முன்வராத நிலையில், தாமே சென்று ஆலய மணியை ஓங்கி அடித்துக் கொண்டிருந்தார். தீபாராதனையும் முடிந்தது... ஆனால்... மணிச்சத்தம் மட்டும் நின்றபாடில்லை. அவருடைய மூளையில் முருகப்பெருமான் எந்தக் கேள்விக்கு விடையளித்தாரோ? எந்தப் புதிர் அவர் மனத்தில் ஓடியதோ? அந்தத் திருமலைக் குமாரசாமியே அறிவான்.

செங்கோட்டையில் பிள்ளையைக் காண ஐரோப்பியர்கள் சிலர் வருவதும் போவதுமாக இருப்பார்கள். இதைக் கவனித்த பெரியவர் ஒருவர், ""என்ன தம்பி, நீ என்ன வேலை பார்க்கிறே?'' என்று கேட்டாராம். ""நான் ஆசிரியர் வேலை பார்க்கிறேன்'' என்று அவருக்குப் புரியும் விதத்தில் பிள்ளை கூற, ""போயும் போயும் உனக்கு ஒரு வாத்தியார் வேலைதான் கிடைத்ததா? ஒரு போலீஸ் வேலை... உனக்குக் கிடைக்கவில்லையா?'' என்று கேட்டாராம் அந்தப் பெரியவர். கிட்டத்தட்ட 250 ஆண்டு கால ஆங்கிலேய அடிமைத்தனத்தால் இந்திய மூளையில் தோன்றிய சிந்தனைக்கு ஒரு சாம்பிள் இது.


ஏன், அன்று மட்டும்தானா? இன்றும்கூட நான் ஊருக்குச் செல்லும் போதெல்லாம், பெரியவர்கள் சிலர் என்னிடம் நலம் விசாரிப்பார்கள். 'என்ன செய்கிறாய்?' என்ற கேள்விக்குப் பதில் அளித்த பிறகு அவர்கள் சொல்வது... ""என்னல்லாமோ படிச்சியே! போயும் போயும் உனக்கு பத்திரிகை வேலைதான் கிடைத்ததா?'' அப்போதெல்லாம் எஸ்.எஸ். பிள்ளையிடம் இவர்களைப் போன்றவர்கள் கேட்டதுதான் நினைவுக்கு வரும். தலைமுறைகள் மாறினாலும் மனஎண்ணம் மட்டும் இன்னும் மாறவில்லை...! அன்று அரசியல் அடிமைத்தனம். இன்று அக்கல்வி தந்த பயன் - சிந்தனை அடிமைத்தனம்.
எஸ்.எஸ்.பிள்ளை ஆராயத் தொடங்கிய எண் கணித விதி பற்றிய ஒரு சிறு அறிமுகம் இது...


(Theory of Numbers)
3 ஆம் நூற்றாண்டின் டயாஃபேன்டைன் ஆராயத் தொடங்கிய எண் கணிதக் கோட்பாடு இது. பிறகு படிப்படியாக இந்த எண்கணிதக் கோட்பாடுகள் பலராலும் கையாளப்பட்ட நிலையில், கி.பி. 1640 இல் ஃபெர்மாட் எனும் கணிதமேதை இது சம்பந்தமாக ஒரு கணிதப் புதிரை உருவாக்கி அதற்கு விடைகாணாமலேயே மறைந்துவிட்டார்.



அதன்பின் பிரெஞ்சுக் கணிதமேதை "லான்சிரேஞ்சு' ஒரு நிரூபணத்தைக் கண்டறிந்தார். அவருக்குப்பின்னர் கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர் வாரிங்க்ஸ் ஒரு புதிரையும் வழங்கி அதற்கான விடையையும் தந்தார். ஒரு புதுமை, அவருக்கு அதற்கான விடை தெரிந்தது; ஆனால் அதை அடையும் வழிமுறை தெரியவில்லை. அவர் தொடங்கி வைத்ததுதான், கணித உலகில் புகழ்பெற்ற வாரிங்ஸ் ப்ராப்ளம்.


இதற்கு விடைகாண 300 ஆண்டுகளாக பல மேதைகள் முயன்றும் முடியாது போயிற்று. புகழ்பெற்ற ஹங்கேரி நாட்டு கணிதமேதை பால் எர்டாஸ் (இவர் 20 வயதில் டாக்டர் பட்டம் பெற்று பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியவர்.) என்பார்கூட, வாரிங்க்ஸ் ப்ராப்ளத்தைத் தொட்டு, விட்டுவிட்டார்.


1858 இல் பேராசிரியர் லியோவில்லி, 1909 இல் ஜெர்மன் மேதை டாக்டர் வெய்ஃபிரிட்ஜ், தொடர்ந்து ஜெர்மன் பேராசிரியர் லியாண்டர், இங்கிலாந்து மேதைகளான ஹார்டி, லிட்டில்வுட் ஆகியோர், பின் 1933 இல் அமெரிக்க மேதை டாக்டர் டிக்ஸன், பின் பேராசிரியர் ஜேம்ஸ்


- இப்படி பல மேலைநாட்டு அறிஞர்களும் அடுத்தடுத்த படிகள் முன்னேறினார்களே ஒழிய முழுவிடையையும் காண அவர்களால் இயலவில்லை.

இப்படி பலரையும் திணறடித்த வாரிங்க்ஸ் ப்ராப்ளத்துக்கு, தமது 29 ஆவது வயதில் தனியாகத் தமது ஆராய்ச்சியைத் தொடங்கிய 5 ஆவது வருடத்தில் ஒரு வழியையும், அதற்கான விடையையும் காண்பதில் பெரு முன்னேற்றம் கண்டார் எஸ்.எஸ்.பிள்ளை. தொடர்ந்து அதிக அளவிலான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதினார்.


வாரிங்க்ஸ் பிராப்ளத்தை விளக்குவது சற்று கடினம் என்றாலும், ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் ஓரளவு கோடிட்டுக் காட்ட முடியும்.


நம்மிடையே, எண்களின் வர்க்க எண்களில் மட்டுமே நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் புழங்குகின்றன என்று வைத்துக்கொள்வோம்... அதாவது, 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81... என்று! இப்போது நீங்கள், ஒரு பொருளை கடைக்குச் சென்று வாங்குகிறீர்கள்... கடைக்காரர் அதன் விலை ரூ.103 என்று சொல்கிறார். நீங்கள் அதற்கான விலையை உங்கள் கையில் இருக்கும் மேற்சொன்ன ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கொடுக்கிறீர்கள்.


அதை எந்த வழிகளில் எல்லாம் தருவீர்கள்...


1. ஒரு ரூபாய் நோட்டுகள்/நாணயங்களாக 103 தருவீர்கள்.
2. 4 ரூபாய் நோட்டுகள்/நாணயங்கள் 25ம், ஒரு ரூபாய் மூன்றும் தருவீர்கள்.
3. பதினோரு 9 ரூபாய்... மற்றும் ஒரு நான்கு ரூபாய்..
4. பதினாறு ரூபாய் நோட்டு ஆறு, ஒரு நான்கு ரூபாய், மூன்று ஒரு ரூபாய்...
5. 25 ரூபாய் நான்கு, மூன்று ஒரு ரூபாய்...
6. ஒரு 1ரூபாய், ஒரு 4 ரூபாய், இரண்டு 49 ரூபாய்...


- இன்னும் உங்களுக்குத் தோன்றும் வழிகளில் எல்லாம் நீங்கள் இதைச் சரிசெய்து கொடுக்கலாம். ஆனால், கடைக்காரர் ஒரு எரிச்சல் பேர்வழி என்று வைத்துக்கொள்ளுங்கள். கூட்ட நேரத்தில் ஒரு ரூபாயாக நூற்றி மூன்று ரூபாய் கொடுத்தால் அதை எண்ணுவதற்கு அவருக்கு நேரம் போதாமல் இருக்கலாம்... அதாவது உங்கள் நேரம் போதவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள்...


மேலும், உங்கள் சிறிய பர்ஸில் அவ்வளவு பணத்தை சில்லரையாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் என்ன செய்வீர்கள்.. மிகச் சுருக்கமாக ரூபாய் நோட்டுகளை எவ்வளவு குறைவாக எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கமாக எடுத்துச் செல்லவே எண்ணுவீர்கள் அல்லவா..? எனவே, மேற்கண்ட விஷயத்தில் பொருளின் விலையான 103 ஐ, 1+4+49+49 என எண்ணிக்கை குறைந்த அளவில் ரூபாய் நோட்டுகளை கையாள முடியும் அல்லவா...


இதுபோன்றே, எல்லா மிகை எண்களுக்கும் பொருந்த வேண்டும் என்றால், அதாவது இந்த 103 ரூபாய் மட்டுமல்ல, குறைந்தது எத்தனை ரூபாய் நோட்டுகள்/ நாணயங்கள் ஒவ்வொரு பிரிவிலும் தேவை என்பதே இந்தக் கடைக்காரரின் வாரிங்க்ஸ் பிராப்ளம்.


கணித மொழியில் இதை அதிக பட்ச g(k)=? என்பர்.



வாரிங்ஸ் பிராப்ளத்தை அனுமானமாகப் போட்டுவிட்டுப் போய்விட்டார். பின்னர் வந்தவர்கள் அந்த அனுமானத்துக்கு ஒரு தீர்வு கண்டனர்.


லெக்ரான்ச் g(2)=4, என நிறுவினார்.

ஹில்பர்ட் இதனைத் தீவிரமாக ஆராய்ந்தார். பின்னாளில் இது, ஹில்பர்ட் வாரிங்க்ஸ் ப்ராப்ளம் என்றே அழைக்கப்பட்டது. அவர் தீர்வில், g(3)=9... என்பது.


g(6)=73 என்பது பிள்ளையின் கண்டுபிடிப்பு.


g(5)=37 என்பது ஜெ.ஆர்.சென்னின் கண்டுபிடிப்பு. 1964ல்.


g(4)<=20 என்பதை 1985ல் ஆர்.பாலசுப்பிரமணியம் நிறுவினார்.



1968ல் ஆர்.பாலசுப்பிரமணியம், ஜே.டி.சௌலியர்ஸ், எஃப்.டிரஸ் ஆகிய மூவரும் g(4)=19 என்று கண்டறிந்தனர்.

k=6 என்றால், அதிகபட்ச g(k)=? என்ற கேள்விக்கான பதிலை பிள்ளை அளித்துள்ளார். பிள்ளையும் டிக்ஸனும் k=4, k=5 என்பதோடு, k<400>

டயஃபேண்டைன் தோராயங்கள் பற்றியும் பிள்ளை ஆராய்ச்சி செய்து, ஒரு தேற்றத்தையும் நிறுவியுள்ளார். பெர்டிரண்டு கொள்கைக்கு பிள்ளை ஒரு புதிய நிரூபணம் அளித்தார். சீனிவாச ராமானுஜனும் இதற்கு வேறு வகையில் அளித்துள்ளார். இருப்பினும், பால் எர்டாஸின் நிரூபணம் மிகச் சிறந்ததாக கணித உலகில் போற்றப்படுகிறது.


1936 பிப் 10 இல் எஸ்.எஸ். பிள்ளை தமது கண்டுபிடிப்பை உறுதிசெய்து ஒரு நூலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ""டாக்டர் பிள்ளை தியரி ஆஃப் நம்பர்ஸ்' - ஒரு கோட்பாடு, கணிதவியலில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தது. வாரிங்க்ஸ் ப்ராப்ளத்திற்கு விடைகண்ட கையோடு, சுமார் 400 ஆண்டுகளாகக் கணித உலகை மிரட்டிக் கொண்டிருந்த "ஃபூரியர் சீரிஸ்' என்ற தொடருக்கான புதிரையும் விடுவித்துப் பெருமை பெற்றார்.


இதைத் தொடர்ந்து விஞ்ஞானி ஐன்ஸ்டீனும் டாக்டர் ஓபன்ஹைமரும் தங்களுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட பிள்ளைக்கு அழைப்பு விடுத்தனர். அவரோ, ""என் ஆராய்ச்சிக்கு இந்தியாவே போதும்'' என்று பணிவுடன் சொல்லி, உலகையே வியக்க வைத்தார்.



ஆனால் பின்னாளில் சான்பிரான்ஸிஸ்கோவில் நடைபெறவிருந்த உலகக் கணித மாநாட்டுக்குத் தலைமையேற்கவும், பிரின்ஸ்டன் பல்கலையில் ஜன்ஸ்டீனுடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் டாக்டர் பிள்ளை 1950 ஆகஸ்டில் அமெரிக்கா புறப்பட்டார். முன்னதாக இருமுறை பயணத்தை ரத்துசெய்தார். ராமானுஜம் இன்ஸ்டிட்யூட்டில் சில ஆய்வுச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியதால் முதல் பயணம் சிலநாள் தள்ளிப்போனது. இரண்டாவது பயணத்தை விமானக் கம்பெனியே ரத்து செய்ததாம்.

நாட்டின் துர்பாக்கியம், மூன்றாவது முறையாகக் கிளம்பியபோதுதான், முதலில் தெரிவித்தேனே... செங்கோட்டை முத்துசாமிப் பூங்காவில் நண்பர்கள் மத்தியில் "இந்தியாவுக்குப் புகழ் கிடைக்கும்' என்று! அப்படி ஏதோ தாள்களை விசிறிக் காட்டிவிட்டுப் பெருமிதமாகக் கூறிச்சென்றார்.



30.8.1950 இல் ஸ்டார் ஆஃப் மேரிலேண்ட் விமானத்தில் இந்தியாவின் புகழையும் தன்னுடைய எதிர்காலத்தையும் பற்றிய கனவுகளோடு பறந்தார். கெய்ரோவில் எரிபொருள் நிரப்பிய பின் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி சகாரா பாலைவனத்தில் எரிந்து சாம்பலாகி விழுந்தது. அத்தோடு பிள்ளையின் கனவும் புகைந்து போனது. இன்னொரு இந்தியக் கணித மேதையின் ஆராய்ச்சிகள் பாலைவனமாகிப் போனது...

சான்பிரான்ஸிஸ்கோ மாநாட்டில் பங்குகொண்ட கணிதமேதைகள் சிவசங்கரன் பிள்ளைக்குப் புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தினர். உலகின் தலைசிறந்த கணிதமேதைகளைப் பற்றி இ.டி.பெல் எழுதிய ''மென் ஆஃப் மேத்தமேட்டிக்ஸ்" நூலில் இந்தியாவின் சார்பில் இராமானுஜனும் சிவசங்கரன் பிள்ளையும் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இவ்விருவரும் தமிழர்களே என்பது நமக்குப் பெருமை தரத்தக்கது.


எஸ்.எஸ்.பிள்ளை பின்னால் வரப்போகும் தலைமுறைக்காக ஒரு அனுமானத்தை விட்டுச் சென்றுள்ளார். அது எஸ்.எஸ்.பிள்ளை அனுமானம் என்ற பெயரில் இன்னும் தீர்க்க முடியும்;தீர்க்க முடியாது என்ற இரண்டுங்கெட்டான் நிலையிலேயே உள்ளது.


இப்படி, தலைசிறந்த கணிதமேதைகளை உலகுக்குக் காட்டிய தமிழகத்திலிருந்து இன்னும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்கள் வெளிவரவேண்டும். அதற்கு, "கணக்கு - கசப்பு' என்னும் எண்ணத்தை இளம் மாணவர் உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்த ஆசிரியர்கள் முயலவேண்டும். அதற்கு முதல் படி, கணிதத்தின் மீது, நம் முன்னோர்களுக்கு உள்ள ஆளுமையை நம் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி, ஒரு பெருமித உணர்வை வளர்க்க வேண்டும். ராமானுஜன், எஸ்.எஸ்.பிள்ளை போன்ற கணித மேதைகளின் வாழ்வை எடுத்துச் சொல்லி, மாணவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.


மறைமலை அடிகளார், தனித் தமிழ் இயக்கம்



மறைமலை அடிகள் (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், மேலும் சிறப்பாக அவர் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடக்கி தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள்.

மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் 1876 சூலை 15 ஆம் நாள் மாலை 6.35க்குப் திருக்கழுக்குன்றத்திலே பிறந்தார். இவர் தந்தையார் சொக்கநாதர், தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவருக்குப் பின் 4 ஆண் சகோதரர்களும் (திருஞான சம்பந்தம், மாணிக்க வாசகம், திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி ஆகியோர்) 2 பெண் சகோதரர்களும் (நீலாம்பிகை, திரிபுரசுந்தரி ஆகியோர்) பிறந்தனர். இவர் காலத்தில் பல புகழ் பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். மனோண்மணீயம் இயற்றிய சுந்தரனார், பெரும்புலவர் கதிரைவேலர், திரு. வி. கலியாணசுந்தரனார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், தணிகைமணி வ.சு.செங்கல்வராயர், ரசிகமணி டி. கே. சிதம்பரநாதர், பேராசிரியர் ச. வையபுரியார், கோவை இராமலிங்கம், சுப்பிரமணிய பாரதியார், மீனாட்சி சுந்தரனார், பொத்தக வணிகரும் மனோண்மணீயம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியரும் ஆன நாராயணசாமி, சைவசித்தாந்த சண்டமாருதம் என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயகர், என்று பலர் வாழ்ந்த காலம். 1905 இல் சைவ சித்தாந்த மகா சமாஜம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார்.

மறைமலை அடிகள் (ஜூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், மேலும் சிறப்பாக அவர் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடக்கி தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள்.

மயிலாடன் அவர்கள் "விடுதலை" 15-7-2008

மறைமலை அடிகள் தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் பிறந்த நாள் இந்நாள் (1876). தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படக் கூடியவர் - ஆரியத்தின் கடும் எதிரி - இந்து மதம் வேறு - தமிழர் சமயம் வேறு என்பதில் உறுதியாக இருந்தவர். சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 1933 திசம்பர் 23, 24 ஆகிய நாள்களில் தமிழ் அன்பர் மாநாடு நடை பெற்றது. சென்னைப் புத்தகால யப் பிரச்சார சங்கத்தார் இம் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த னர். அதன் தலைவர் கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர், பொக்கிஷதார் எஸ். ராமஸ்வாமி அய்யர், வரவேற்புச் சபைத் தலைவர் உ.வே. சாமிநாதய்யர் மற்றும் பொறுப்பாளர்கள் எல்லாம் பார்ப்பனர்களே. அம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மறை மலை அடிகளார் அவர்களுக்கு கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் 22.12.1933 இல் தந்தி ஒன்றை அனுப்பினார். அதற்கு மறைமலை அடிகள் அளித்த பதில்தான் மிகமிக முக்கியமானது. கடிதங்கள், அழைப்புகள், தந்தி ஆகியவற்றிற்கெல்லாம் உங்களுக்கும், டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடந்தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பண்பட்ட பழைய மொழிகளெல்லாவற்றி லும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டை நலஞ் சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிற மொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்குமென்றும், அதன் வளர்ச்சியினை குன்றச் செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகின்றோம். ஆதலால் எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைபிடிக்காத உங்களுடைய மகாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள்வீர்களாக! என்று பதில் எழுதியவர் தான் நமது போற்றுதலுக்கும், மதிப்புக்கும் உரிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள். சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டவர். சைவக் கொள்கையால் மாறு பட்டு இருந்தாலும்கூட, தந்தை பெரியார் அவர்களைப் பெரிதும் போற்றி மதித்தவர். இந்தி எதிர்ப் புக்களத்தில் தந்தை பெரியார் அவர்களுக்குத் துணை நின்றவர். தந்தை பெரியார் அவர்களைப் பல்லாவரத்துக்கு அழைத்துச் சென்று தாம் அரிதிற் சேர்த்துக் குவித்த நூல்கள் கொண்ட நூலகத்தைக் காட்டி மகிழ்ந்தவர். அவர் உடலால் மறைந்திருக்கலாம்; தமிழ் உணர்வால் நம்மோடு நிறைந்திருக்கிறார். இனம் எது - இனப் பகைவர் யார் என்பதை இனம் பிரித்துக் காட்டிய அந்தத் தமிழ்க் கடலின் நினைவைப் போற்றுவோம்! குறைந்தபட்சம் தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயரைச் சூட்டும் உணர்வு கிளர்ந்தெழட்டும் - அதுதான் அந்தப் பெருமகனாருக்கு தமிழர்கள் காட்டும் உண்மையான மதிப்பாகும்.

Dr. C. செண்பகராமன் பிள்ளை (15.9.1891-26.5.1934)



பிரிட்டனை,ஏன் இந்த உலகையே நடுநடுங்க வைத்த சர்வாதிகாரி ஹிட்லரையே மன்னிப்பு கேட்க வைத்தவர் ...
"எம்டன்" போர்க்கப்பலை இயக்கி சென்னையில் இவர் போட்ட குண்டுகள் லண்டனை கிடுகிடுக்க வைத்தன...
"இந்திய தேசிய தொண்டர் படை" யை ஜெர்மனியில் நிறுவி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்-கு வழிகாட்டியாக இருந்தவர்...

நாம் அனைவரும் வீரத்துடனும்,நெஞ்சம் விம்மும் பெருமிதத்துடனும் முழங்குகின்றோமே
"ஜய்ஹிந்த் " என்று ....அந்த மந்திரச்சொல்லை முதல்முதலாக உச்சரித்தவர்...

வாழ்நாள் முழுக்க இந்திய விடுதலையையே சுவாசித்துக் கொண்டு நாடுநாடாகத் திரிந்தார். இவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று பிரிட்டனும் பொருமிப் பொருமி நாடுநாடாக கொலைஞர்களை பின்னாலேயே அனுப்பியது...கடைசியில் தோல்வி தான் அதற்கு மிஞ்சியது...

ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்ததால் ஆத்திரம் அடைந்த நாஜி கட்சியினர் "மெல்லக் கொல்லும் நஞ்சு " வைத்து ,பலவீனமாய் நிராயுதபாணியாய் இருந்தவரை கோழைத்தனமாக அடித்துக் கொலை செய்தனர்!!!

1914 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு வெளியே, ஜெர்மன் மன்னர் கெய்சரின் ஆதரவோடு முதன் முதலாக `இந்திய தேசியத் தொண்டர் படை' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். செண்பகராமன் வழி நடத்திய ஐ.என்.வி. என்ற இந்திய தேசியத் தொண்டர் படையின் பேராற்றலைக் கண்டு பிரிட்டிஷ் அரசு கலக்கம் அடைந்தது. வங்கச் சிங்கம் சுபாஷ் சந்திரபோஷின் ஐ.என்.ஏ. இற்கு செண்பகராமன் அமைத்திருந்த ஐ.என்.வி.யே முன்னோடியாக அமைந்திருக்கிறது. 1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டில் சுபாஷும் செண்பகராமனும் நாட்டு விடுதலை குறித்து ஆராய்ந்த போது, செண்பகராமன் வகுத்துத் தந்த திட்டம் சுபாஷ் சந்திரபோஸைக் கவர்ந்தது ஒன்றே இதற்குச் சான்று.

நவநீதம் பிள்ளை




நவநீதம் பிள்ளை (Navanethem Pillay, பிறப்பு: செப்டம்பர் 23, 1941) தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி ஆவார். இவர் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் 2003 ம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார். ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் செப்டம்பர் 1, 2008 முதல் நான்கு ஆண்டு காலத்துககு இப்பதவியில் பணியாற்றுவார்.

வாழ்க்கைக் குறிப்பு

1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் டர்பன் நகரில் பிறந்த ஒரு இந்திய குடிவழித் தமிழரான நவநீதம் பிள்ளையின் தந்தை ஒரு பேருந்து ஓட்டுநர்.. ஜனவரி 1965 இல் இவர் காபி பிள்ளை என்னும் வழக்கறிஞரை மணந்தார்1982ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுகலை பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.

1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார். அவர், தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்கும், அவரது கணவர் உட்பட்ட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு பாதுகாவலராக கடமையாற்றியவர்.

புவியிடம் அடிப்பிடையிலும் பால், அனுபவ நோக்கிலும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

1973 இல் நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார்.

1992 இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் "ஈக்குவலிட்டி இன்று" என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1995 இல் தென்னாபிரிக்காவின் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய குடிவழித் தமிழ்ப் பெண்மணி இவரே.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்

ஜூலை 24, 2008 இல், ஐநா பொதுச் செயலர் பான் கி மூனால் நவநீதம் பிள்ளை ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக பதவியில் இருந்து விலகும் லூயிஸ் ஆர்பர் இற்குப் பதிலாகப் பரிந்துரைக்கப்பட்டார். ஜூலை 28, 2008 இல் இடம்பெற்ற ஐநா பொது அவையின் சிறப்பு அமர்வில் இவரது நியமனம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. செப்டம்பர் 1, 2008 இலிருந்து நான்கு ஆண்டு காலத்துக்கு இப்பதவியில் இருப்பார்.

விருதுகள்

2003 இல் இவருக்கு பெண்கள் உரிமைக்கான முதலாவது குரூபர் பரிசு வழங்கப்பட்டது.