சோழிய வெள்ளாளர்

on Saturday, December 4, 2010

எம் குலத்தின் வைர, வைடூரியங்க
ள்


சோழிய வேளாளர்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம். 'பிள்ளை' என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டிய வேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடி வேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், சோழிய வெளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டில், சோழர்கள் ஆட்சியதிகாரத்தை இழந்துவிட்ட சூழலில், சித்திரை மேழி பெரிய நாட்டார் அமைப்பும் கலைக்கப்பட்டுவிட்டது எனத் தெரிகின்றது. கைக்கோளர், அகம்படி முதலியார் போன்ற சாதிகள் சித்திரை மேழி பெரிய நாட்டார் அணியில் சேராமல் தங்களை வேளாளர் என அழைக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டனர். உடையார், நயினார், மூப்பனார் ஆகிய சாதிகள் சித்திரை மேழி பெரிய நாட்டார் என்ற அமைப்பிலிருந்து தங்களை விடுத்தபின், பார்கவ குல சத்திரியர் என அழைத்துக் கொண்டனர். பண்டைய அகம்படி சாதிகளில் சோழிய வேளாளர், கார்காத்த வேளாளர், இசை வேளாளர், வீரக்கொடியார் ஆகிய சாதிகள் மட்டுமே வேளாளர் சமூகத்தில் இடம் பெற்று விட்டனர். இவர்களையே உயர்குடி வேளாளராக நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார்.

சோழனின் கிளைகுடியினனான தொண்டைமானைத் தங்கள் இனமாகக் கொள்ளும் சோழிய வேளாளர், சோழனின் கிளைக்குடி என்பது உறுதிபடுகின்றது.

வட இந்தியாவில் யது குலத்தின் கிளைக்குடியாகக் கூறப்படும் ஐந்து பிரிவுகளைக் கொண்ட தாளஜங்கா மரபினரை ஒத்தவராவர் இவர். அக்குலத் தோன்றலான ஏயர் கோமான் கலிக்காம நாயனார் வம்சத்தினரும் இன்று சோழிய வேளாளர் சாதியிலேயே சேர்ந்திருக்க வேண்டும். கலிக்காம நாயனார், வேளாளருடன் மண உறவு கொண்டதைப் பெரிய புராணம் மூலம் அறியமுடிகின்றது.

மற்றொரு செய்தியின் படி பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனது காவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக்கதவுகளை கவர்ந்து வரச்செய்து, பின் பார்த்து பரிகசிக்கப் போன போது அம் மக்கள் தங்கள் மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து பொறாது அவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம்.ஆத்மநாத சாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்து வர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் அவர்கள் இருந்தார்கள்.கலியுகம் 3784ல் பூவந்திச்சோழன் காலமாக ராஜபூஷணச்சோழன் முடிசூட வேண்டிய காலம்.முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாத தனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகல அறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்து வைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர்,சோழிய வேளாளர்,காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்கு மணமுடித்து பின் மன்னனுக்கு முடிசூடினார்களாம்.பழம் பகை மறந்து அரசன் நகரத்தார் மக்களிடம் அன்பும்,ஆதரவும்,சகல மரியாதையும் தந்து கௌரவித்தாராம்.

“பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசு அயலிலிருந்த அதன் சகோதர அரசுகளான சேர, பாண்டிய அரசுகளை வெற்றிகொண்டு சென்னையின் சுற்றுப்புறத்திலிருந்து குமரி முனை வரை மேலாட்சி செலுத்தியது. அந்தக் காலப்பகுதிக்குப் பின்னர் தென்னிந்தியாவின் தமிழ் முகம்மதியர்கள் ‘சோழிய முகம்மதியர்கள்’ என்று அறியப்பட்டனர்@ அல்லது பொதுவாக ‘சோழியர்’ (சோழதேசம் என்று அழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்கள்) என அறியப்பட்டதில் சந்தேகமில்லை. இன்றுவரை ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் தென்பாகத்தைச் சேர்ந்த தம் மதத்தினை ‘சோழிய’ என்றே அழைக்கின்றார். ஏனெனில், சோழியர்களில் மிகப் பெரும்பான்மையோர் மதத்தைத் தவிர, மொழி, பொதுத் தோற்றம், சமூக வழக்கங்கள் என்பனவற்றைப் பொறுத்த வரையில் தமிழர்களாக இருக்கின்றனர்”


சோழியர் எனும் சொல்லானது “சோழதேசம்” என அழைக்கப்பட்ட தமிழ் நாட்டின் மக்களைக் குறிக்கின்றது. வின்ஸ்லோ என்பவர் தமது தமிழ் ஆங்கில அகராதியில் பின்வருமாறு விளக்கம் தருகிறார். சோழியர் – சோழம் எனும் அவர்களது தேசப் பெயரால் வழங்கப்பட்ட, எத்தனையோ குலங்களிருந்து ஆன ஒரு வகுப்பினர். பிராமணர், வேளாளர் முதலியவரிலொரு பிரிவார் சோழியப் பார்ப்பார் சோழிய வேளாளர்........ “சோழியப் பிராமணரும் சோழிய வேளாளரும் போல் சோழிய முகம்மதியர்களும் உள்ளனர். எல்லோரும் சோழ தேசத்தைச் சேர்ந்தவர்கள். ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் அவரது தென்பகுதி மதத் தோழர் ஒருவரைச் “சோழிய” என்று அழைப்பதற்குக் காரணம், அவர் சோழ தேசத்தைச் சேர்ந்தவர் என்பதனாலாகும். ஒரு காலத்தில் தென்னிந்தியா அந்தப் பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டது. பதினோராம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைமீது படையெடுத்து வந்த தமிழர்கள், முன்னர் காட்டியதுபோல் சோழியர் என்றே அழைக்கப்பட்டனர்.


'சோழிய வெள்ளாளர்' போன்று பிள்ளை உட்பிரிவினை ஒத்த, ஆனால் சிறிது வேறுபட்ட 'சோழியர் இல்லம்' என்ற பிரிவு 'இல்லத்துப்பிள்ளைமார்' பிரிவின் ஓர் அங்கமாக உள்ளது.

சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப் பிரிவினரே ஆவர். கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ள கி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச் சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. இவற்றில் இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில் உள்ளன. எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும் கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப்பிள்ளைமார் எனும் ஈழவர் சமூகத்திலும் பளிங்கில்லம், மஞ்சநாட்டு இல்லம், தோரணத்தில்லம், மூட்டில்லம், சோழிய இல்லம் எனும் உட்பிரிவுகள் இருக்கின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சோழப் பேரரசர் முடிசூடும் தலமாகவும் குலத் தெய்வ திருத்தலமாகவும் சிதம்பரம் இருந்ததைப் போன்று கொங்கு சோழ அரசர்களுக்குக் கோநகராகவும் முடிசூடும் தலமாகவும் விளங்கியது பேரூர் ஆகும்.இதிலிருந்தே கொங்குச் சோழர்களின் அரசகுலப் படையாகிய எழுநூற்றுவர்க்கும், சோழியர் பிரிவைச் சேர்ந்த சிறுகுடி வேளாளர்க்கும் உள்ள தொடர்புகளை உய்த்துணரலாம்.மேற்குறிப்பிட்ட சிறுகுடி வேளாளர் மடத்துச் செப்பேட்டில் சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம் திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச் சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில் பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.


பழ. நெடுமாறன் பிள்ளை




பழ. நெடுமாறன்
(1933, தமிழ்நாடு) ஒரு தமிழ்த் தேசியவாதி. தொடக்க காலத்தில் மகாத்மா காந்தி, காமராசர் மீது கொண்ட பற்றால் இந்திய தேசிய காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார். இந்திரா காந்தி மதுரையில் தாக்கப்பட்ட போது அவரை உயிருடன் மீட்டார். காமராசர், நெடுமாறனின் துணிச்சலையும் குணத்தையும் பார்த்துவிட்டு "மாவீரன்" என்று பெயர் சூட்டினார். தமிழகத்து கூட்டணி முடிவுகளை தமிழக தலைவர்களின் கருத்தை அறிந்து கொள்ளாமல் தில்லியில் முடிவு செய்யும் தில்லி ஏகாதிபத்தியத்தின் போக்கை கண்டித்துவிட்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். பின்பு, காமராசர் காங்கிரசு இயக்கத்தை தோற்றுவித்தார். பின்னர், ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டு தமிழர்களின் நலன் கருதி தமிழர் தேசிய இயக்கத்தை தொடங்கினார். தேர்தல் அரசியலில் இறங்காமல் தமிழ் மக்களுக்கான போராட்டங்களை மட்டும் முன்னிறுத்தும் போராட்ட அரசியல் வழி செயல்பட்டு வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு


குடும்பம்

1933 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தியதி, பழ. நெடுமாறன், கி. பழநியப்பனார் - பிரமு அம்மையாருக்கு மகனாக பிறந்தார். அவரது தந்தை மதுரைத் தமிழ்ச் சங்க செயலாளராகவும், மதுரை திருவள்ளுவர் கழக நிறுவனராகவும் பணியாற்றினார்.

1942 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற முத்தமிழ் மாநாடு, 1948 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்த் திருநாள், 1956 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா போன்ற மாபெரும் தமிழ் மாநாடுகளைச் சிறப்புற நடத்திய பெருமை அவரது தந்தையைச் சாரும். பழ. நெடுமாறனுக்கு இரண்டு தமக்கைகளும், மூன்று தம்பிகளும் உள்ளனர். பார்வதி அம்மையாரை மணந்தார்.

கல்வி

மதுரை புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, புனித மரியன்னை உயர் நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில், பள்ளி படிப்பினை முடித்த பழ. நெடுமாறன், தனது கல்லூரி படிப்பினை அமெரிக்கன் கல்லூரி, தியாகராசர் கல்லூரி (இடைநிலை வகுப்பு), அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகிய கல்விக்கூடங்களில் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் சிறப்பு இளங்கலை பட்டம் பெற்றார். அவரது ஆசிரியர்களாக புகழ் பெற்ற முனைவர் அ. சிதம்பரநாதனார், முனைவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், முனைவர் இராசமாணிக்கனார், அவ்வை சு. துரைசாமி பிள்ளை, திரு. அ. கி. பரந்தாமனார் ஆகியோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பொது வாழ்க்கை


மாணவர் இயக்கம்

பழ. நெடுமாறன், மாணவப் பருவத்திலேயே பொது வாழ்வில் ஈடுபட்டார். அவர்தம் கல்லூரி வாழ்வில், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்து, 1958 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். அதே ஆண்டில், அறிவியல் மாணவர் இல்லப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு 1958 -1959 வரை பதவி வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட அண்ணாதுரையை மாபெரும் போராட்டத்திற்கு பிறகு அழைத்து வந்து திருவள்ளுவர் விழா நடத்தினார். மேலும், அறிஞர் அண்ணாவின் ஓம்லாண்ட் பத்திரிகை நிதிக்காக மாணவர்கள் சார்பில் எசு.டி.சோமசுந்தரத்துடன் இணைந்து ரூ.10,000 பணம் திரட்டி அளித்தார்.

அரசியல் ஈடுபாடு

  • 1962 - அமைப்பாளர், மதுரை மாவட்ட தமிழ்த் தேசியக் கட்சி
  • 1964 - மதுரை மாவட்ட இளைஞர் காங்கிரசு அமைப்பாளர்
  • 1970 - மதுரை மாவட்ட காங்கிரசுத் தலைவர்
  • 1973 - 1979 வரை தமிழ்நாடு காங்கிரசுப் பொதுச் செயலாளர்
  • 1979 முதல் - தமிழர் தேசிய இயக்கத் தலைவர்
  • 1980 - 1984 - தமிழக சட்டமன்ற உறுப்பினர்

உலகத் தமிழர் தொண்டு

  • 1982 - நியூயார்க், 1984 - நியூயார்க், 1988 - இலண்டன் ஆகிய நகரங்களில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடுகளுக்குத் தலைமை.
  • 2002 - முதல் உலகத் தமிழர் பேரமைப்பின் நிறுவனத் தலைவர்

தமிழீழப் போராட்டத்தில் ஈடுபாடு

  • 1982 - யாழ் நூலகம் கொளுத்தப்பட்ட போது அங்கு சென்று பார்வையிட்டு நிலைமைகளை அறிந்து வந்து தமிழக முதலமைச்சர் எம்.சி.ஆரிடம் அறிக்கை அளித்தார். அவர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்து தலைமை அமைச்சர் இந்திராவிடம் அனைத்துக் கட்சிகளின் சார்பில் முறையீடு அளிக்கப்பட வேண்டுமென்ற யோசனையைத் தெரிவித்தார். அதற்கிணங்க எம்.சி.ஆர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு புது தில்லி சென்று தலைமை அமைச்சரைச் சந்தித்து இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்த முறையீடு ஒன்றை அளித்தது.
  • 1982 - சிங்கள அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி, செகன் ஆகியோரின் மரண தண்டனையை கைவிட வேண்டுமென தமிழகச் சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றச் செய்தார்.
  • 1983 - கொழும்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மதுரையிலிருந்து இலங்கை நோக்கி 5000 தொண்டர்களுடன் தமிழர் தியாகப் பயணம் நடத்தினார்.
  • 1985 - விடுதலைப் புலிகளின் துணையோடு இலங்கைத் தமிழ்ப் பகுதிகளில் கமுக்கமாகச் சுற்றுப்பயணம்[1] மேற்கொண்டு சிங்களப் படையாட்களின் அட்டூழியங்களைப் பற்றிய விவரங்களையும், ஈழத் தமிழர்களின் துயரங்களையும் நேரில் கண்டறிந்து அவற்றை ஒளிப்படமாக எடுத்து வந்து இந்தியா உட்பட உலக நாடுகளில் காட்டச் செய்தார்.
  • 1987 - திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட போது அங்கு சென்று நிலைமையை அறிந்து வந்து தமிழக மக்களுக்குத் தெரிவித்தார்.
  • 1987 - 1990 - தமிழர் தேசிய இயக்கமும் தோழமைக் கட்சிகளும் இணைந்து ஈழத் தமிழர் போராட்டத்துக்காக அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் மாநாடுகளையும் நடத்தின. 20-12-1990 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் அனைத்து தமிழர் அமைப்புகளின் கூட்டத்தில் ஒருங்கிணைந்த அமைப்பு ஒன்றினை நிறுவி கூட்டாக செயல்படுவதற்கு முடிவு செய்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அமைப்பாளராக பொறுப்பேற்றார். 1991 முதல் இன்று வரை இந்த ஒருங்கிணைந்த அமைப்பின் சார்பில் போராட்டங்களும் மாநாடுகளும் நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் அரசு தடை விதித்த போது அதை மீறி தோழர்கள் சிறை புகுந்தனர்.
  • 1991 - மீண்டும் இலங்கை சென்று இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களைப் பற்றிய உண்மைகளைத் திரட்டி வந்து தலைமை அமைச்சர் வி. பி. சிங்கைப் பார்த்து அவரிடம் அளித்து இந்திய அமைதிப் படையை உடனடியாக முழுமையாகத் திரும்பப் பெறும்படி வற்புறுத்தினார்.

மனித நேயத் தொண்டுகள்

  • 1981 - தருமபுரி மாவட்டத்தில் மோதல் சாவுகள் என்ற பெயரில் அப்பாவி ஊர்ப்புற இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது அந்தப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்து உண்மைகளை அறிந்து வந்து அம்பலப்படுத்தி மோதல் சாவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
  • 1991 - தமிழ்நாட்டில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த காயமடைந்த, ஊனமுற்ற விடுதலைப் புலிகளின் நிலைமை குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு முறையிட்டு அவர்கள் விடுதலை பெற உதவினார்.
  • 1993 - பன்னாட்டுக் கடல் எல்லையில் விடுதலைப் புலிகள் தளபதி கிட்டு பயணம் செய்த கப்பலை இந்தியக் கடற்படை வழி மறித்ததைத் தொடர்ந்து கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. தளபதி கிட்டு உட்பட பல தோழர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். கப்பலின் மாலுமிகள் 9 பேரை இந்தியக் கடற்படைக் கைது செய்தது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் வழக்கை உச்ச நீதிமன்றம் வரை நடத்தி 9 பேரின் விடுதலைக்கும் வழி வகுத்தார்.
  • 1998 - இராசீவ் காந்தி கொலை வழக்கில் 26 தமிழர்களுக்கு ஒட்டு மொத்தமாகத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்காக குழுவை அமைத்து வழக்கை நடத்தி 19 பேர் விடுதலை பெறுவதற்கும் மூவருக்கு வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்படுவதற்கும் வழிவகுத்தார். 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை மட்டுமல்ல, இந்தியாவில் தூக்குத் தண்டனையை அறவே நீக்க வேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் பெரும் இயக்கத்தை நடத்தியதோடு சென்னையில் ஐம்பதினாயிரம் பேரைத் திரட்டி மரண தண்டனை ஒழிப்பு ஊர்வலம் நடத்தினார். அதன் விளைவாக மரண தண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் ஒருவரான நளினியின் மரண தண்டனை வாழ்நாள் தண்டையாக குறைக்கப்பட்டது.
  • 2000 - கன்னட நடிகர் இராசகுமாரை வீரப்பன் கடத்திய போது காட்டுக்குள் சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கிச் சென்று வீரப்பனிடம் பேசி இராசகுமாரை விடுவிக்க உதவினார். இதன் விளைவாக இரு மாநிலங்களுக்கிடையே மூளவிருந்த இனக் கலவரத்தைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து அதிரடிப் படையின் அட்டூழியங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டினார்[2].
  • 2000 - வீரப்பனுக்கு உதவியவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் தடா சட்டப்படிக் கைது செய்யப்பட்டு மைசூர் சிறையில் வாடிய 121 அப்பாவி ஊர்க்காரர்களின் வழக்கைச் சிறந்த வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்தி அவர்களில் 117 பேரின் விடுதலைக்கு வழி வகுத்தார்.
  • 2007 - பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் திரட்டும் இயக்கத்தினை நடத்தி, தமிழகமெங்குமிருந்து ஏறத்தாழ ரூபாய் 1 கோடி பெறுமானமுள்ள பொருட்களைத் திரட்டினார். அப்பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப இந்திய அரசு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பல கட்சியினரை ஒன்று திரட்டி நாகப்பட்டினத்திலும்[3], இராமேசுவரத்திலும் படகுப் பயணப் போராட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னையில் சாகும் வரை பட்டினிப் போராட்டம் மேற்கோண்டார்

சிறை


  • மாணவப் பருவத்திலிருந்து இன்று வரை பல போராட்டங்களில் கலந்து கொண்டு சுமார் 50 க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டு காவலிலும் சிறையிலும் நாட்கணக்கிலும் மாதக் கணக்கிலும் வைக்கப்பட்டார்.
  • தமிழகத்தின் ஒன்றிரண்டு சிறைகளைத் தவிர அனைத்துச் சிறைகளிலும் இருந்திருக்கிறார்.
  • 1969-இல் காங்கிரசு கட்சியில் இருந்த போது, தோழர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்காக கைது செய்யப்பட்டு 6 மாத காலம் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். பொய் வழக்கு என்று வெளிப்படுத்தியே வெளி வருவேன் என்று பிணையில் வெளிவர மறுத்து விட்டார். ஆறு மாத காலம் முடிவதற்கு ஓரு நாள் இருந்த போது உயர் நீதிமன்றம் அவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று தீர்ப்புரைத்தது. இதற்காக பெருந்தலைவர் காமராசர் நெடுமாறனை மாவீரன் என பாராட்டினார்.
  • 1993 - தடா சட்டத்தின் கீழும் 2002ஆம் ஆண்டு பொடா சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டார்.
  • 2002ஆம் ஆண்டு பொடாவில் கைது[4] செய்யப்பட்ட போது ஓராண்டு 5 மாத காலம் சிறையில் இருந்தார்.
  • பிணையில் வெளியே வந்த பிறகு சுமார் இரண்டு ஆண்டு காலம் வாய்ப்பூட்டுப் போடப்பட்டு பேச்சுரிமை பறிக்கப்பட்டார்.
  • இன்று வரை பல்வேறு போராட்டங்களை நடத்தி அதற்காக 1 வாரம் பத்து நாட்கள் என சிறையில் அடைக்கப்பட்டும் பின்னர் பிணையில் வெளிவந்து தொடர்ந்து வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று வருவதும் தொடர்கிறது.

இதழியல் பணி


  • 1960 - தமிழ்நாடு நாளிதழ் துணை ஆசிரியர்
  • 1962 - குறிஞ்சி வார இதழ், செய்தி நாளிதழ் ஆகியவற்றின் ஆசிரியர்
  • 1997 முதல் தற்போது வரை “தென்செய்தி” இதழின் ஆசிரியர்.

அரசியல் நூல்கள்

  1. நேதாஜி எங்கே?
  2. பெங்களுர் முதல் டில்லி வரை
  3. காமராசருக்குக் கண்ணீர் கடிதங்கள்
  4. நீதி கேட்கிறோம்?
  5. சட்டமன்றத்தில் நமது குரல்
  6. தேர்தல் தந்த திருப்பம்
  7. மத்திய - மாநில உறவு - சில குறிப்புகள்
  8. மதுரை முதல் மாஸ்கோ வரை
  9. தமிழர் தன்னுரிமை முழக்கம்
  10. தமிழன் இழந்த மண்
  11. தமிழகம் - நதிநீர் பிரச்னைகள்
  12. தன்மானத் தலைவர் சுபாஷ் போஸ்
  13. Why a new Constituent Assembly?
  14. புதிய அரசியல் யாப்பு அவையைக் கூட்டுக
  15. தமிழரின் தலையாய தேசியப் பிரச்னைகள்
  16. பேருருக் கொள்ளும் தமிழ்த் தேசியம்
  17. தன்னுரிமையா? மாநில சுயாட்சியா?
  18. மனித குலமும் தமிழ்த் தேசியமும்
  19. மதமாற்றம் - பார்ப்பன இந்துத்துவா கூப்பாடு
  20. தடா முதல் பொடா வரை
  21. உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும்
  22. மூன்றாவது அணி- மக்கள் தயார்! கட்சிகள் தயாரா?

ஈழத் தமிழர் சிக்கல்

  1. இலங்கைத் தமிழர் பிரச்னை அதிர்ச்சி தரும் உண்மைகள்
  2. Srilanka Tamils Problem - A Shocking Revelation
  3. பாலஸ்தீன விடுதலைப் போராட்டமும் - தமிழீழ விடுதலைப் போராட்டமும்
  4. Palestine Liberation Struggle & Tamil Eelam Liberation Struggle
  5. பாரதப் பிரதமருக்குப் பகிரங்கக் கடிதம்
  6. தில்லியின் துரோகக் கொள்கை
  7. ஈழப் போர்முனையில் புலிகளுடன்
  8. பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்
  9. காவிய நாயகன் கிட்டு
  10. தமிழீழம் சிவக்கிறது
  11. தங்கவங்கமும் தமிழீழமும்
  12. Tamil Eelam and Golden Bengal
  13. காகிதப் புலி கருணா
  14. இந்தியாவும் புலிகளின் தீர்வுத் திட்டமும்

நெடுங்கதைகள்

  1. தென்பாண்டிவீரன் (கவியரசு கண்ணதாசனின் தென்றல் இதழின் நெடுங்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது)
  2. சோழ குல வல்லி
  3. அருவிக்கரை அழகி
  4. முல்லை வனத்து மோகினி
  5. சந்தன முல்லை

இலக்கியம் - வரலாறு

  1. தமிழ் வளர்த்த மதுரை
  2. தமிழ் உயர் தனிச் செம்மொழி
  3. எழுக உலகத் தமிழினம்
  4. தமிழறிஞர் தெ.பொ.மீ-யின் அரசியல் தொண்டுகள்
  5. தமிழரும் கீதையும்
  6. கவியரசர் என் காவலர்
  7. பழந்தமிழர் பரவிய நாடுகள்

Dhanraj Pillai



PERSONAL
Date of Birth July 15, 1968
Height 172 cm / 5' 8"
Weight 64 kg / 141 lb
Birthplace Kirkee (Pune), Maharashtra
Marital Status Single
Languages Tamil (mother tongue)
Hindi, Marathi, English
Occupation Assistant Manager,
Indian Airlines
Address in India A/10 Nikhil Apartments
Bhau Patil Road
Bopodi, Pune 411003
Maharashtra
Miscellaneous Only Indian to play in:
4 Olympics, 4 World Cups, 4 Champions Trophies
4 Asian Games, 4 Asia Cups




DOMESTIC CIRCUIT
Teams Indian Airlines
Mahindra & Mahindra
City Mumbai
Position Centre-Forward
Awards Padma Shree (2001)
Rajiv Gandhi Khel Ratna (1999)
Arjuna Puraskar (1995)
TOURNAMENTS
Senior Nationals 1988 - Delhi
May 1997 - Bangalore (4th)
Junior Nationals 1985 - Manipur
National Games Dec 2002 - Hyderabad (2nd), 3 GOALS, Captain
Jawaharlal Nehru Hockey Tournament Nov 2003 - Delhi (2nd)
Nov 2002 - Delhi (2nd)
Bombay Gold Cup Apr 2003 - Mumbai (1st)
Muruguppa Gold Cup Jul 2002 (1st) - Man of the Final, Forward of Tourney
Jul 1999 (1st) - Man of The Final
July 1998 (2nd)
Lal Bahadur Shastri Hockey Tournament Nov/Dec 2004 - Delhi (2nd)
Nov/Dec 2002 - Delhi (2nd)


INTERNATIONAL CIRCUIT
Matches 400 (post 2003 Asia Cup)
Goals Between 130 and 170 goals (estimate)
International Debut 1989 - Allwyn Asia Cup - New Delhi (2nd)
Olympics Aug 2004 - Athens (7th), 2 GOALS
Sep 2000 - Sydney (7th), 1 GOAL
Jul/Aug 1996 - Atlanta (8th), 2 GOALS
Jul/Aug 1992 - Barcelona (7th)
World Cup Feb/Mar 2002 - Kuala Lumpur (10th), 2 GOALS
May 1998 - Utrecht (9th), 2 GOALS, CAPTAIN
Nov/Dec 1994 - Sydney (5th), 1 GOAL, Selected for World XI team
Feb 1990 - Lahore (10th), 1 GOAL
Champions Trophy Aug 2003 - Amstelveen (4th), CAPTAIN
Aug/Sep 2002 - Cologne (4th), 2 GOALS, Player of the Tournament
Dec 1996 - Chennai (4th), 3 GOALS
1995 - Berlin (5th), 2 GOALS
Asian Games Oct 2002 - Busan (2nd), 3 GOALS
Flag bearer of Indian contingent, Member of All-Star Asian Games team
Dec 1998 - Bangkok (1st), 10 GOALS, CAPTAIN
1994 - Hiroshima (2nd)
1990 - Beijing (2nd)
Asia Cup Sep 2003 - Kuala Lumpur (1st), 1 GOAL, CAPTAIN
Nov 1999 - Kuala Lumpur (3rd), 3 GOALS
1993 - Hiroshima
1989 - New Delhi (2nd)
Commonwealth Games Sep 1998 - Kuala Lumpur (4th), 5 Goals, Captain
SAF Games 1995 - Chennai (1st)
Indo-Pak Series Feb/Mar 1998 - Lost 3-4, 3 GOALS, CAPTAIN
Champions Challenge Dec 2001 - Kuala Lumpur (1st), 1 GOAL
Sultan Azlan Shah Cup Jan 2004 - Kuala Lumpur (LAST), 2 GOALS, CAPTAIN
Feb 2000 - Kuala Lumpur (3rd), 5 GOALS
1996 - Ipoh
Indira Gandhi Gold Cup 1995
1994 - 7 GOALS, Player of the Tournament
Asian Tour Mar 2001 - Dhaka - 9-Nation Prime Minister's Gold Cup (1st), 3 GOALS
Australian Tour Jun 2003 - Sydney - 3-Nation Tournament (1st), 1 GOAL, CAPTAIN
May/Jun 2003 - Perth - 3-Nation Tournament (2nd), 1 GOAL, CAPTAIN
Apr 2000 - Sydney (3rd in 4-Nation), 1 GOAL
Apr 2000 - Perth (1st in 4-Nation), 2 GOALS
European Tour Aug 2004 - Leverkusen - 3-Test Series vs. Ireland (Won 2-1), 1 GOAL
Jul 2004 - Dusseldorf - 4-Nation Tournament (2nd)
Jun 2003 - Hamburg - 4-Nation Hamburg Masters (1st), CAPTAIN
Jun 2003 - Duisburg (GER) - 1-off Test with Germany, 2-2 Tie, CAPTAIN
Aug 2002 - Amstelveen - Rabobank 4-Nation Tournament (LAST), 1 GOAL
Jan 2000 - Barcelona - 4-Nation Tournament (3rd)
Jan 2000 - Barcelona - 1-off Test with Canada (Won 3-2)
Jan 2000 - Barcelona - 3-Test Series vs. Belgium (Won 2-0), 1 GOAL
1997 - Hamburg - 4-Nation Tournament
1995 - Germany - 4-Nation Tournament
1993 - Vienna - Alps Cup
1993 - Poznan - Inter-Continental Tournament
1990 - Germany - BMW Tournament, 2 GOALS
Test Series at Home Jan 1998 - 4-Test Series vs. Germany - Lost 0-3, CAPTAIN
1997 - vs. Germany
1996 - vs. England, Germany, Australia
1995 - vs. Holland, Spain
1994 - vs. Holland, Australia, South Africa
1993 - vs. South Africa


FOREIGN CLUBS
Indian Gymkhana London 1992 - 1993
FC Lyon Lyon, France 1993
Selangor Kuala Lumpur 19?? - 19??
Abhahani Ltd. Dhaka Jul 1997, Mar 1999
Stuttgart Kickers Stuttgart May - Jun, Oct 2000
Bank Simpanan Nasional Kuala Lumpur Nov 2000 - Feb 2001
Arthur Andersen Kuala Lumpur Mar 2002 - Jun 2002
Singapore Singapore November 2002
Ernst and Young Kuala Lumpur Sep - Oct 2004
Telekom Malaysia Kuala Lumpur Jul - Sep 2005

Thiruvarur S. Latchappa Pillai பிள்ளை.




Befitting Honour
:


Legend of his times and truly a great exponent of the famed wind instrument Nadhaswaram, Latchappa Pillai during the Consecration of Tiruvarur East Street Pazhaniandavar Temple, played nadhaswaram to the tambura struti and moved by such a great rendering; Kirupananda Variar gladly conferred the title, ‘Isai Arasu’ (referring King of Music) on Latchappa. During the regime of Dr M G R as Chief Minister of Tamilnadu, Latchappa was conferred the state honour, ‘Kalaimamani’. Dr Kalaignar as Chief Patron of Muththamizh Peravai presented the ‘Nagasvara Selvam’ title to Latchappa. While his disciples in Vyasarpadi on the occasion of Muthuthandavar Festival bestowed upon Latchappa the title of ‘Thol Isai Vendar’, the premier institution Rasika Ranjani Sabha in Mylapore presented him with a shawl, gold medal, cash award and a citation as a befitting honour for this great exponent of the wind instrument as “Kala Seva Ratna”.

Those that mattered most:

Latchappa recounts the support he received from Devakottai Narayan Chettiar, Chiththoor Subramaniya Pillai, Marungapuri Prof Sambamurthi Sir, Justice E Krishna Iyer, Kalyanakrishna Bhagavathar, Maharajapuram Santhanam, Alathur Venkatesa Iyer, Ariyakudi, Semmangudi and M S Subbulakshmi.

Kalki Rajendran had a special interest in Latchappa’s nadhaswaram exposition and it is no surprise that Latchappa was invited to perform during the marriage of his daughter and son.

Distinctive technique:

Briga-s and viraladi both solely and exclusively belong to Nadhaswaram. In this particular aspect, the late Tiruvadudurai T N Rajaratnam Pillai proved himself an expert; none can excel him. Having played and learnt several rare playing skills from him, Tiruvarur S Latchappa Pillai, was able to captivate rasikas. Hence connoisseurs and laymen hold him in high esteem.

For posterity:

All India Radio has recorded an interview by Tiruvarur Latchappa and Tiruveezhimalai Nataraja Sundaram, with T Sundaram Pillai as the interviewer. There is also another interview recording on Nadhaswaram that spans for about three hours. Hamsadhwani, the music institution in Chennai honoured Latchappa during the Birth Centenary Celebrations of T N Rajarathinam Pillai in a befitting manner, with Dr Kaliganar presiding over the function.

Popular Tamil Magazine Kumudham published a conversation of Tiruvarur Latchappa Pillai and Namagiripettai Krishnan in its issue. The celebrated Ananda Vikatan carried a detailed article on the Ivory Nadhaswaram, the prized possession of Latchappa. The Madras University has in its treasure troves an interview given by Latchappa, while Max Muller Bhavan and Sampradhaya organized special recitals by this great exponent of the famed traditional wind instrument Nadhaswaram.

Crowing Moment:

Come September 2007, the Government of Tamilnadu in recognition of his talents and merits appointed Tiruvaur Latchappa Pillai as the Director of the Tamilnadu Music College, a rare honour and a distinguished order for the humble musician, who has graduated to this level by sheer determination and great vidwat.


Tiruvarur S Latchappa பிள்ளை.



Tiruvarur S Latchappa Pillai – a legend

1925, November 28 was born Tiruvarur S Latchappa Pillai in the musical family of Tiruvarur Saminatha Pillai and Vandammal.

Drawn by histrionic talents:

Chidambaram Jayarama Pillai, the maternal uncle was in those days acting and playing in various roles along with singing in Bala Vinodha Sabha of Madurai. Jayarama Pillai was living with Saminatha Pillai. Naturally drawn by him, young Latchappa who was barely about six years then, followed suit. Young Latchapp was a sensation as he could sing and act well. But all was not too well for more than a year. The company became bankrupt following heavy losses sustained following wash out of its programmes while tented in Virudhachalam when heavy rain played havoc.

Tutelage:

Latchappa moved over to Chidambaram at the tender age of seven and was with his sister’s family. Brother in law (Sister’s husband) Natarajasundaram Pillai encouraged the boy to learn vocal music.

At the age of eight, Latchappa was back at Tiruvarur. He learnt about 40 varnam and 200 keerthanam from his brother Balasubramania Pillai. When under ten years of age, Latchappa, had opportunity to play in the processions taken out by the Justice Party members lead by Periyar E V Ramasami. For long Latchappa was the preferred Nadhaswaram player for the party.

Destiny:

On the passing away of his mother, Latchappa moved to his Brother-in law Natarajasundaram Pillai’s place in Kandanur in Chettinad. Here Latchappa learnt nadhaswaram playing and mastered the art under his Guru. He accompanied his Guru in various performances and gained great experience and expertise.

Natarajasundaram Pillai took teenager Latchappa with him to Colombo. In Yazhpanam nadhaswaram playing had large following and hence, Latchappa was invited to perform there for about five years. Latchappa barely 12, would be in Colombo for six months, performing in various nadhaswaram programmes and would return to Tiruvarur for six months.

The King:

Fifteen year old Latchappa got a rare opportunity to perform at the Zamindar Temple near Pattukkottai, for the procession of the deity. His music was well received and was conferred a title by the Zamin, as “Nadhaswara Mannar” meaning the King of nadhaswaram playing.

Sixteen year old Latchappa had now become such popular that he was invited to Colombo for special performances. During these years he played along with Andankoil Kuruppiah Pillai, an accomplished nadhaswaram player.

The Expert and the Expertise:

The years 1942 to 45 were crucial for Latchappa as during these years he was playing along with the celebrated artist Kulikkarai Pichchaiappa Pillai that enabled both the performers to exhibit their best potential competing with each oher.

Past his teens, Latchappa had his own set to perform. He did accompany his Uncle Tirukkuvalai Arunachalam in few concerts. This was followed by playing along with Kulikkarai Kalidas Pillai, Tiruvavaduthurai Kakkayi and Tiruvenkadu Subramania Pillai. Latchappa was paired along with Tiruvavaduthurai Rajarathinam Pillai the most celebrated nadhaswaram exponent of his time for about twelve years. The performances received great acclaim and rave reviews.

The joy of playing together:

Latchappa racalls with pride his accompanying several great artists of yesteryears namely, Tiruvarur Vaidyanatha Pillai, Rajarathnam Pillai, Thiruveezhimalai Govindaraja Vaidyanatha Pillai, Nachiyarkoil Rajadurai Pillai, Mayavaram Mani Pillai, Mamundiya Pillai, Sikkil Kandasamy Pillai, Kottur Rajarathinam Pillai, Mannarkudi Paramsivam Pillai, Tiruchcherai Sivasubramania Pillai, Ramasami Krishnamurthi Pillai, Kalyanasundaram Pillai and his father Tirucherai Abiramasundaram Pillai.

Memorable Duets:

Latchappa also lists other memorable duets as playing with Kadavalakudi Dakshinamoorthi Pillai, Tiruthuraipoondi Rajarathnam Pillai, Valangaiman Soundararaju Pillai, Andarkoil Selvarathinam Pillai, Madurai Sethuraman Ponnusami Pillai, Tiruchi A K C Natarajan, Koilpatti Ramaiah Pillai, Tirunelveli Rangappa, Sankaraiah, Kambar, Sudalaiyandi Kambar, Masilamani Kambar, Aachchanpuram Chinathambi Pillai, Tiruvidaimaruthur Mani Pillai, Therazhundur Ramuseenu Pillai, Vallam Krishna Pillai, Tiruvidaimaruthur Raja, Sembanarkoil Rajarathnam, Thuraiyur Muthukumarasami Vaidyanathan and Thuraiyur Rajakanna Sambandam Pillai.

Mutual Admiration:

Having established himself with T N Rajarathinam Pillai, Latchappa was once playing at AIR Trichy. A telegram from TNR was handed over to him by K C Thyagarajan of AIR Trichy that required Latchappa rushing to Tiruvarur.

Latchappa reached Tiruvarur the same day around 11.30 a.m. only to hear TNR playing nadhaswaram nonstop for hours together from the firstloor hall of his house. TNR invited Latchappa to play along with him and explained several rare ragas and krithis to him. His wife Saradha was surprised to see all this and explaimed: “Ennaikkum illatha thirunala innikki irukkey!. Kakkayi, Pitchaiappa evargalukkellam sollikkudakkatha neengal latchappavirkku solli kudukkureengaley” – What a special occasion!. The likes of Kakkayi and Pitchaiappa did not get to learn these from you? You are teaching Latchappa”.

Rajarathnam Pillai responded: “Saradha! Long years ago, my uncle took me to the Pillayar Temple in Tiruvarur and organized my nadhaswaram playing. The next morning I visited Saminatha Pillai in Tiruvarur, who having heard me blessed me thus: “You will be admired as the Emperor of Nadhaswaram Playing!” (Nee Periya Nagasvara Chakravarthiyaga varuvai). I have been bestowed that title, and am so overwhelmed to see his son Latchappa and hence the fondness and admiration are quite natural. Latchappa preseves the manuscripts of songs and the notations written in the handwriting of T N Rajarathinam Pillai as a rare treasure given to him!

They keep Company:

Latchappa is fresh in memory about the interaction he had with the great names associated with Nadhaswaram playing of his era. Tiruvavaduthurai Rajarathnam Pillai, Tiruvidaimaruthur Veeruchami Pillai, Perambalur Angappa Pillai, Thiruveezhimalai Subramanya Pillai, Natarajasundaram Pillai, Tiruvavaduthurai Kakkayi alias Natarajasundaram Pillai, Injakudi Pichchakannu Pillai, Nachiyarkoil Rajanthurai Pillai, Tirucherai Ramasamy Krishnamurthi Pillai, Tirucherai Kalyanasundaram Rajarathnam Pillai, Tirhucherai T V S Sivasubramanya Pillai, Namagiripettai Krishnan, and Karukkurichi Arunachalam are those contemporaries. A K C Natarajan would insist on Latchappa playing rare ragas popularized by TNR those days and was too glad to play along with Latchappa on several occasions.

The Virtue:

Latchappa was also invited to teach vocal music to two young girls Saraswathi and Vijaya, daughters of Tiruvarur Jawlikkara Street Kalyanasundara Sastriar. The duo could graduate to give public performances in about six months time. Their maiden performance was held at Tiruvaur Yagneswara katta kovil and the sisters became popular musicians within a very short time and carved a special recognition for their teacher.Latchappa has been traditionally playing nadhaswaram in the Tiruvarur temple. It is by virtue of a practice that even today he holds a 15 day (in a year) playing schedule at the Tiruvarur temple.

It was Prof. Sambamurthy, the celebrated music teacher and connoisseur of yesteryears who became a great fan of Latchappa’s nadhaswaram playing that he would listen to his playing for hours together as the temple festivities at Tiruvarur would be held of over 25 days every year when the procession route would be filled with music.

Nadhaswaram would be played on the entire route of the procession and it has very special raga delineation for each street and junction. Each intersection would have more than 15 songs to be played, that had mallari, padams, varnam, raagam, rakthi melam, trikalam, tisra nadai etc., followed by a song on the presiding deity to end the recital.

A Moment to Cherish:

Latchappa was the secretary of the Trinity Sabha, Tiruvarur for over twelve years. This brought him in close contact with all those great personalities of the music fraternity. During this period, the houses of Syama Sastri, Thiyagaraja and Dikishithar were purchased and Latchappa recounts the efforts by all those great luminaries. Latchappa has a very special word about the keen interest and special support extended by (later to be Barat Ratna) M S Subbulakshmi to the cause during his regime. Latchappa had the special privilege to organise a music school in the erstwhile residence of Syama Sastri with about 100 children learning the nuances.

The anniversary functions of this school were graced by eminent men that included Justice E Krishna Iyer, Dr V Raghavan, Vadapathimangalam Thyagaraja Mudaliar, Dr S Ramanathan, to mention a few. They gifted books, Veena, Mrudangam, Tambura, Harmonium and other equipments to the institution, a support that helped Latchappa to pursue his mission. The greatest moments for this institution, include a concert by the great maestro M S Subbulakshmi on a personal invitation by Latchappa.

A teacher identifies another:

Prof. Sambamurthy invited Latchappa to be a Lecturer in Tirupathi Venkateswara Music College and Latchappa gladly accepted the assignment. During one of the concerts at the College Hall, Latchappa was presented a Gold Medal in appreciation of his rendering.


பி. டி. ஆர். பழனிவேல்ராசன்




பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் 1932 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27, தேதியன்று பி. டி. ராஜன் - கற்பகாம்பாள் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சட்டப்பேரவைத் தலைவராகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.

இளமைப்பருவம்

பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் 1938 ஆம் ஆண்டில் இலங்கை கண்டியில் உள்ள டிரினிடி பள்ளியில் சேர்க்கப்பட்டார். நான்காண்டுகள் அங்கு பயின்ற அவர் அதன் பின்பு தமிழ்நாட்டில்நீலகிரி மாவட்டம், குன்னூர் சூசையப்பர் பள்ளியிலும் அதன்பின்பு 1946 -ல் சேலம் மாவட்டம், ஏற்காடு மாண்ட்போர்டு பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து சென்னை கிறித்துவக் கல்லூரியில் வேதியியல் பாடத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்று பின் சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து 1954 -ல் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். 1954 -ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டு மதுரையில் வழக்கறிஞராகத் தொழிலைத் தொடங்கினார்.

திருமணம்

பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் தனது 31 வது வயதில் 1963 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதியில் சேலம் சுப்பராய முதலியார் மகளான ருக்மணியம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1966 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் தேதியில் ஆண் குழந்தை பிறக்க பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் மகனுக்குத் தியாகராஜன் என்று பெயர் சூட்டினார்.

அரசியல்

பி.டி.ஆர்.பழனிவேல்ராசன் அவருடைய தந்தையும் நீதிக்கட்சியின் நிறுவனருமான பி.டி.ராஜனைப் போலவே அரசியலில் ஈடுபடத் துவங்கினார். பல கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 1967 ஆம் ஆண்டில் தேனி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின்பு 1972 முதல் 1976 வரை தமிழ்நாடு கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். 1974 -ல் லண்டன் மாநகரில் நடந்த 24-வது காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டார். 1977-ல் பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சொத்துப் பாதுகாப்புக் கழக உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1980 -ல் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1984 -ல் தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்கு பட்டதாரிகள் தொகுதியில் போட்டியிட்டு மேலவை உறுப்பினராகத் தெர்வு செய்யப்பட்டார். 1996ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார்.2001 ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதன்பிறகு 2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இதர பதவிகள்

மதுரை வழக்கறிஞர் பேரவைப் புரவலர், மதுரை காஸ்மோபாலிடன் கிளப் தலைவர், மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் போன்ற பல பதவிகளை ஏற்று சிறப்பாகச் செய்திருக்கிறார்.

இலங்கைத் தமிழருக்காக சிறை

1985 ஆம் ஆண்டில் இலங்கை யில் திரு.பாலசிங்கம் மற்றும் திரு. சந்திரசேகரன் ஆகியோரின் வெளியேற்ற உத்தரவை எதிர்த்து மறியல் செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மரணம்

2006ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று மதுரைக்கு இரயிலில் திரும்பிக் கொண்டிருந்த போது திண்டுக்கல் அருகே 20-05-2006ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மாரடைப்பு ஏற்பட மரணமடைந்தார்.

தமிழீழம் : தந்தை செல்வநாயகம்பிள்ளை




இலங்கையைப் பொறுத்தவரையில் கண்டி ராஜ்ஜியம் ஆங்கிலேயரிடம் வீழ்ச்சி காண்பதற்கு முன்னர் அது ஒரு தனி தேசமாக ஒரு குடையின் கீழ் இருந்தமைக்கான வரலாற்று ஆதாரங்கள் குறைவு அல்லது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்தவகையில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு முன்னர் இலங்கையில் பல்வேறு ராஜ்ஜியங்களும், சிற்றரசுகளும் இருந்தமையை மகாவம்சம் கூட உறுதிப்படுத்துகின்றது.

இந்த நிலையில் பிரித்தானியரின் பிரித்தாளும் உத்தியின் காரணமாகத்தான் இலங்கையில் இன்றும் இன முரண்பாடுகள் தொடர்கின்றன. அதாவது இலங்கையில் இருக்கும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிப்பதன் மூலம் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதே பிரித்தானியரின் பிரித்தாளும் உத்தியின் பிரதான நோக்கமாக இருந்தது.

இவ்வாறாக பிரித்தானியரின் பிரித்தாளும் உத்தியில் முதலாவதாக சிங்கள-முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் இன முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட்டன. இந்த கலவரத்தின்போது தமிழ் சமூகம் சிங்கள சமூகத்துக்கு ஆதராவாக இருந்தமையும், சேர் பொன் ராமநாதன் அவர்கள் சிங்களவர்களுக்காக பிரித்தானியா சென்று பேசியமையும், பின்னர் சிங்களவர்கள் அவரை தேரில் ஏற்றி இழுத்து வந்தமையும் வரலாறு.

இவ்வாறான ஒரு நிலையில்தான் இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் வழங்கி பிரித்தானியர்கள் வெளியேறினார்கள். உண்மையில் சுதந்திரத்துக்கு முன்னர் இலங்கைக்குள் இன முரண்பாடுகள் பரவலாக இருந்தபோதிலும் அவை பூதாகரமாக வெளித்தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும். அந்தவகையில் சுதந்திரத்துக்கு பின்னர்தான் சிங்களவர்கள் தமிழ், முஸ்லீம் சமூகங்களை அடக்கியாள தொடங்கினார்கள்.

சிங்கள சமூகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ், முஸ்லீம் சிறுபான்மைச் சமூகம் சாத்வீகமான வழிகளில் பல போராட்டங்களை முன்னெடுத்தது. இந்தப் போராட்டங்களில் தந்தை செல்வநாயகம் அவர்களின் பங்கு மிக மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. தமிழ் சமூகத்திற்கான சமவுரிமை தொடர்பிலும், தமிழ் மொழியை அரச கரும மொழியாக்க வேண்டுமென்றும் தந்தை செல்வநாயகம் அவர்கள் உறுதியுடன் போராடினார்.தந்தை செல்வநாயம் அவர்கள் தன் வாழ்வின் பெரும் பகுதியை தமிழர்களுக்காகவும், அவர் தம் உரிமைகளுக்காகவும், தமிழ் மொழியின் இருப்பிற்காகவும் செலவிட்டவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

நியாயமான வழிகளில், சிறு துளியும் வன்முறைகள் இல்லாமல் தந்தை செல்வநாயகம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீக போராட்டங்களை சிங்களத் தலைமைகள் அடக்கு முறைகளையையும், வன்முறைகளையையும் கட்டவிழ்த்துவிட்டும், ஒப்பந்தங்கள் என்ற பெயரில் சில போலி நாடகங்களை அரங்கேற்றியும் தணித்துவிடலாம் என்று நினைத்தபோதிலும் தந்தை செல்வா அவர்கள் மிகவும் உறுதியுடனும், தெளிவுடனும் தனது போராட்டங்களை முன்னெடுத்தார்.

சிங்களத் தலைமைகளால் தந்தை செல்வநாயகத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் பண்டா-செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம் ஆகிய இரண்டும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இந்த இரண்டு ஒப்பந்தங்களுடன் இலங்கை-இந்திய ஒப்பந்தம், பிரபா-ரணில் ஒப்பந்தம் ஆகியனவும் அடங்கலாக தமிழர்கள் இதுவரை இன முரண்பாட்டிற்கான தீர்வைத் தேடித்தரும் என்று மொத்தம் நான்கு பிரதான ஒப்பந்தங்களை எதிர்பார்த்தார்கள். ஆனாலும் இவ் ஒப்பந்தங்கள் அனைத்தையும் மீறியதுடன் அவற்றை கிழித்தெறிந்த பெருமையும் சிங்கள தலைமைகளையே சாரும்.

ஒப்பந்தங்கள், வன்முறைகள் என்று பல வழிகளிலும் தந்தை செல்வநாயகத்தின் போராட்டங்களை தணிக்க சிங்களத் தலைமைகள் முயன்று தோற்ற நிலையிலும், சிங்களத் தலைமைகளிடமிருந்து தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என்கின்ற நிலையிலும்தான் "தமிழ் சமூகத்திற்கான ஒரே தீர்வு பிரிந்து சென்று தனித் தேசம் ஒன்றை நிறுவுவது" என்கின்ற தீர்மானம் வட்டுக்கோட்டை மாநாட்டில் எடுக்கப்பட்டது..

இவ்வாறாக தந்தை செல்வநாயகம் அவர்களால் எடுக்கப்பட்ட தனித் தேசம் என்கின்ற கொள்கையை நிறைவேற்றுவதற்காக ஜனநாயக வழிமுறைகளில் போராடுவதனால் எந்த வித பலனும் விளையப்போவதில்லை என்கின்ற நிலையில்தான் தமிழ் இளைஞர்கள் ஒன்றுகூடி பல்வேறு ஆயுத இயக்கங்கள் தோற்றம் பெற்றன.

உண்மையில் பல்வேறு ஆயுதக் குழுக்கள் என்கின்ற நிலை இருந்தாலும் எல்லா ஆயுத இயக்கங்களினதும் உருவாக்க நோக்கம் ஆரம்ப காலங்களில் "தமிழீழம்" என்பதாகவே இருந்தது. அதாவது இயக்கங்களால் வேறுபட்டிருந்தாலும் எல்லா போராளிகளினதும் இலட்சியம் ஒன்றாகவே இருந்தது. இவ்வாறாக தோற்றம் பெற்ற ஆயுத இயக்கங்களில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளட், ரெலோ, தமிழீழ விடுதலைப் புலிகள், ஈரோஸ் போன்றவை முக்கியமான இயக்கங்களாக காணப்பட்டன.இந்த இயக்கங்களில் ஆரம்ப காலங்களில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பு மிகவும் பலம்பொருந்திய இயக்கமாக காணப்பட்டது.

இவ்வாறாக தோற்றம் பெற்ற இயக்கங்களுக்கு இந்தியா தனது பிராந்திய நலனின் அடிப்படையில் ஆயுதங்களை வழங்கியதுடன், ஆயுதப் பயிற்சிகளையையும் வழங்கியிருந்தது. அதாவது இலங்கையில் ஒரு அமைதியான சூழ்நிலை இருந்தால் அது தனது வல்லாதிக்க சக்திக்கு எதிர்காலத்தில் சவாலாக அமைந்துவிடும் என்பதே இந்திய தேசம் தமிழ் ஆயுதக் குழுக்களை ஊக்குவிக்க காரணமாக அமைந்திருந்தது. மேலும் இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பதும் இந்தியாவின் இந்தச் செயலுக்கான காரணம் என்று சொல்ல முடியும்.

இந்தியா தனது அரசியல் தேவைகளுக்காக ஊக்குவித்த ஆயுத இயக்கங்கள் குறுகிய காலத்துக்குள் தம்மை வளர்த்துக் கொண்டமையாலும், எல்லா இயக்கங்களும் இலட்சியத்தால் ஒன்றுபட்டிருந்தமையாலும் எதிர்காலத்தில் இந்த இயக்கங்கள் மேற்குலக நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தம்மை மேலும் பலப்படுத்தி எல்லா இயக்கங்களும் ஒன்றுபட்டு இந்தியாவுக்கு எதிராக திரும்பினால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்கின்ற இந்திய புலனாய்வு அமைப்பான றோவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இயக்கங்களின் இலட்சியங்களைச் சிதைக்கும் செயலில் இந்தியா இறங்கியது. மேலும் தென்னிலங்கை அப்போது இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தமையும் இந்த செயலுக்கு வழிவகுத்தது.

இந்தியா தனது திட்டங்களை அரங்கேற்றுவதற்காக ஒவ்வொரு இயக்கங்களினதும் தளவைர்களை தமது நாட்டுக்கு அழைத்து மூளைச் சலவை செய்யத்தொடங்கியது. இதில் பல தலைவர்களுக்கு பணத்தாசையும், பதவியாசையும் ஊட்டப்பட்டது. அந்தவகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரைத் தவிர மற்றைய இயக்கங்களின் தலைவர்களிடத்தில் இந்தியாவின் மூளைச்ச் சலவை வெற்றியளிக்கவே ஒவ்வொரு இயக்கங்களும் தமது "தமிழீழம்" என்கின்ற கொள்கையிலிருந்து விலகிக்கொண்டன. இதனால் அதிருப்தியடைந்த குறித்த இயக்க உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இயக்கங்களைவிட்டு வெளியேறியதுடன், சிலர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தம்மை இணைத்துக் கொண்டனர்.

இந்தியாவின் இந்த மூளைச் சலவையின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வடக்கு கிழக்கிற்கான முதலமைச்சர் பதவி தருகின்றோம் போராட்டத்தை கைவிடும்படி இந்தியா கேட்டுக்கொண்ட போதிலும் பிரபாகரன் அதனை நிராகரித்ததாகவும், தமிழீழம் என்கின்ற கொள்கையிலிருந்து எந்தக் காலத்திலும் விலக முடியாது எனத் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது.

உண்மையில் இன்று தமிழீழம் என்று பேசினால் அது தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கிய கொள்கை என்கின்ற அளவுக்கு தந்தை செல்வநாயகம் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழீழக் கொள்கையில் புலிகள் உறுதியுடன் இருந்துள்ளார்கள்.